பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி போக்கும் ஒருபுடை ஒத்திருக்கும். திருவாய்மொழியில் பராங்குச நாயகி தானாகவே எம்பெருமான் உறையுமிடமான திருக்கோளுரை விசாரித்துக்கொண்டு புறப்பட்டுப் போகின்றாள். இத்திருமொழியில் எம்பெருமானே வந்து பரகால நாயகியை அழைத்துக்கொண்டு செல்கின்றான். இவ்வளவே வேற்றுமை. ஒரு சமயம் ஆளவந்தார் குழுவில் இவ்விரண்டு திருப்பதிகங்களைப் பற்றி ஆராய்ச்சி நடைபெற்றது. “உண்ணும் சோறு திருவாய்மொழியிலும் மகள் தாயை விட்டுச் சென்றாள்; கள்வன்கொல் திருமொழியிலும் மகள் தாயை விட்டுச் சென்றாள்; இந்த இருவருவள் எந்த மகளுக்காகத் தாய் அதிகம் கவலைப்படவேண்டும்? - என்பதாக, அப்போது அங்கிருந்த முதலிகள், பரகால நாயகி தனித்துச் செல்லவில்லை; நெடுமால் துணையாப் போயின பூங்கொடியாள் (3-5-10) என்கையாலே தலைவனாகின்ற துணையுடன் சென்றிருக்கின்றாள்; ஆகையால் அவளைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. பராங்குச நாயகி அப்படி துணையுடன் செல்லாமல் துணைவன்பால் தனியே சென்றாளாகையால் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது” என்றார்கள். இதனைக் கேட்ட ஆளவந்தார், "இப்படிச் சொல்லலாகாது; பராங்குச நாயகி தனியே சென்றாளாகிலும்தான் நினைத்தவிடத்திற்குப் போய்ச் சேரவேண்டும் என்னும் ஆவலினால் எப்படியாவது விரைவிற்சென்று சேர்ந்து விடுவாள்; வழியில் தங்கி அபாயங்களுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதற்குக் காரணம் இல்லை. ஆனது பற்றியே "திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளுரே” என்று ஐயமின்றி அறுதியிட்டுச் சொல்லப் பெற்றது அங்கு. ஆகையால் அவளைப் பற்றிக் கவலைப்படவேண்டிய தில்லை. பரகால நாயகியும் அப்படித் தனியே சென்றிருப்பாளாகில் அவளும் தனக்கு உத்தேச்யமான திருவாலியிலே சென்று சேர்ந்தே திருவள்; திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருவாலியே என்று தாயும் உறுதியாகக் கூறியிருப்பாள்; அவளைப் பற்றியும் கவலைப்பட வேண்டாதிருக்கும். அங்ங்ன் அன்றியே தம்பதிகளாய்ச் செல்லுகையால் நாயகனுடைய வடிவழகில் ஈடுபட்டு நாயகி பைத்தியம் பிடித்தும், நாயகியின் வடிவழகில் ஈடுபட்டு நாயகன் பைத்தியம் பிடித்தும் இப்படி இருவரும் பித்தம் தலைக் கொண்டவர்களாய்ப் போக நேருமாகையால் உத்தேச்யமான 27. திருவாய். 6.7:1