பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 133 திருவாலியில் சென்று சேர்வர் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. திருவாலியிற் சென்று சேர்வர்களோ அன்றியே ஒருவருக்கொருவர் பைத்தியம் பிடித்தவர்களாகச் சென்று இலங்கை போன்ற விரோதிகளின் இருப்பிடத்தில் சென்று சேர்வார்களோ? என்று ஐயுற்றுக் கவலைப்பட வேண்டியுள்ளது. இது தோன்றவே அணியாலி புகுவர் கொலோ? என்று ஐயம்படவே சொல்லப்பட்டிருப்பதைக் காண்மின் என்றருளிச் செய்தனராம். ஆகவே, இத்திருமொழியின் ஒவ்வொரு பாசுரத்திலும் 'ஆலிபுகுவர் கொலோ? என்று ஐயமாகவே சொல்லியிருப்பது பொருந்தும். பெரியாழ்வார் திருமொழியிலும், நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர, அல்லியும் தாதும் உதிர்த்திட்டு அழகழிந் தால்ஒத்த தாலோ இல்லம் வெறியோடிற் றாலோ என்மகளை எங்கும் காணேன்; மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள் கொல்லோ" (நாள்மலர் . அப்போது அலர்ந்த பூ அல்லி - உள்ளிதழ் தாது - புறவிதழ்; மதுரைப்புறம் . திருவாய்ப்பாடி, புக்காள் - புகுந்தாள்) என்று இருவரும் சேர்ந்து பிச்சேறிக் கம்சனின் நகரமாகிய மதுரையிற் புகுவார்களோ? அன்றி அதற்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுவார்களோ? என்று உடன்போக்கிற் சென்ற தலைவியைக் குறித்துத் திருத்தாயார் ஐயப்பட்டுச் சொன்னதும் ஈண்டு நினைக்கத்தக்கது. திருத்தாயர் பல்வேறு விதமாகப் பேசித் துயர் உறுகின்றாள். அயல் மணாட்டி ஒருத்திக்குச் சொல்லுகின்றாள். “பண்டு வெண்ணெய் திருடின இடையன் என் வீட்டில் புகுந்து என் பெண்ணின் வாலெயிறுறிய நீரைப் பருகினான்; அவனை விரும்பி அவனுடன் சென்றுவிட்டாள்" என்பதாக (2). மற்றொரு தோழியிடம், “அரக்கர் குலப் பாவையை முக்கரிந்தவனுடன் சென்றுவிட்டாள்" என்கின்றாள் (3). பரகாலத் திருத்தாயர் தெருவில் நின்று அலற்றுவதைக் கேட்டு ஓடிவந்த ஒரு மகளிடம் “அவன் தொல் பிறப்பு அறியேன்; அவன் இளைஞன், சங்கை ஊதுபவன்; பாண்டவர்கட்குத் தூது சென்றவன். அவன் ஊர் எது என்பதும் 28. பெரியாழ். திரு. 3.81