பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பின்னர் வெளிவந்து பிராகாரத்தை வலம் வருகின்றோம். அடுத்து, தாயார் சந்நிதிக்கு வந்து அவரைச் சேவித்து அவர்தம் திருவருளுக்கும் பாத்திரர்களாகின்றோம். பின்னர், திருமண்டபத்தில் ஓரிடத்தில் அமர்ந்து திருப்பாகரத்திலுள்ள தத்துவக் கருத்துகளில் அசை போடுகின்றோம். ஒரு பாசுரத்தில் வரும், யாவருமாய் யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி' (யாவருமாய் - சேதநப் பொருள்களாய், யாவையுமாய் - அசேதநப் பொருள்கள் எல்லாவற்றையும்; வேதப்பொருள்களுமாய் - வேதம் கூறும் பொருள்களுமாய்) என்ற பாசுரப்பகுதிப்படி உயிருள்ள பொருள்களையும், உயிரில் பொருள்களையும் எம்பெருமான் உடலாகவுடையவன்; நான்மறைகளும் எம்பெருமானின் சொருபம், உருவம், குணம், விபூதி முதலியவற்றைக் கூறுகின்றன. எம்பெருமான் நான்முகன் உருவத்தில் உலகைப் படைக்கின்றான்; தானான தன்மையில் காத்தல் தொழிலைச் செய்கின்றான். உருத்திரன் உருவத்தில் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளுகின்றான் என்பதை உணர்த்துகின்றது. மேற்கூறிய சரீர - சரீரி பாவனையின் தத்துவத்தை, வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய எம்பெருமான்" என்று வேறொரு விதமாகக் கூறுவர் ஆழ்வார். இதில் பல்லுயிரும் தானான எம்பெருமான் என்பதற்கு பெரியவாச்சான் பிள்ளை தரும் சிறப்பான விளக்கம்: 'தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை 'உனக்கென்ன வேணும்? என்றால், 'எனக்குக் கல நெல் வேணும் என்னுமிறே தன்னபிமானத்துக் குள்ளே அடங்குகையாலே. அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் - ஸ்வ வ்யதிரிக்த ஸம்ஸ்த வஸ்துக்களும் தன்னைத்தவிர பிற பொருள்களும் தனக்கு ப்ராகாரமாய் புறம்பு ஒருவரின்றிக்கே உபய விபூதியும் தன்னிழலிலே யொதுங்கும்படி யிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்திய வாசம் பண்ணுகிற தேசம்’ என்பது. இந்திரன், இமையவர், முனிவர்கள், நான்முகன், கதிரவன் சந்திரன் இவர்கட்குத் திருவருள் பாலித்தவன் இந்த எம்பெருமான் 9. பெரி. திரு. 4.12 10. மேலது 4.1:3