பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகன் 141 (4). பிரளயாபத்தில் ஆகாயம், கடல்கள், தீவுகள் குலவரைகள் இவற்றையெல்லாம் திருவமுது செய்து உய்யக் கொண்ட பிரான் (5). பாலகனாய் ஏழுலகத்தையும் உண்டு ஆலிலையில் களைப்பாறியவன் (6). இரணியாசுரனைக் கிழித்தழிக்கும் நரசிம்மனாக எழுந்தருளியவன் (7). குவலயாபீடம் என்ற மதக் களிற்றினைப் பாகனோடு அக்களிற்றின் தந்தத்தைக் கொண்டே அழித்தவன் (9). சீதாப் பிராட்டியை மணம் புணர்வதற்காக வயிரம்பற்றிய திண்ணிதான வில்லை முறித்தவன் (8). இந்த எம்பெருமான்களே திருத்தேவனார்த்தொகையில் எழுந்தருளி யிருப்பவன் என்று பாசுரங்களில் தெரிய வைக்கின்றார் ஆழ்வார். இங்ங்னம் சிந்தித்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாடல் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். ஆர்க்கும் வலம்புரியால் அண்டமும் எண்டிசையும் கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் - சீர்க்கும் திருத்தேவ னார்தொகைமால் செவ்வாய்வைத்து ஊதத் தருத்தேவ னார்த்தொகையும், சாய்ந்து" (ஆர்க்கும் - பேர் ஆரவாரம் செய்யும்; வலம்புரி - பாஞ்ச சந்நியம், அண்டம் . அண்டங்கள்; கார் - கரிய, வெற்பு - அஷ்டகுல பர்வதங்கள்; சீர்க்கும் - சிறப்பு பெற்ற: மால் - திருமால்; தரு - கற்பகம்; தேவனார் தொகை - தேவர்களின் கூட்டம்; சாய்ந்து - மூர்ச்சித்து விழ) இதில் திருச்சங்கத்தின் சிறப்பு கூறப்பெறுகின்றது. பாரிசாத மரத்தை உம்பர் உலகினின்றும் கொணர்வதற்காக எம்பெருமான் தேவலோகம் சென்றபோது திருச்சங்கத்தைத் திருப்பவழ வாயில் வைத்து ஊதியவுடன் தேவர்களின் கூட்டம் முர்ச்சித்து விழுந்தன; அண்டங்கள், எண்திசைகள், கார்க்கடல், குலபருவதங்கள் இவை யாவும் நிலை கலங்கிப் போயின என்கின்றார் அய்யங்கார். அய்யங்காரின் அநுபவத்தையும் பாடலால் பெறுகின்றோம். பலசுருதிப் பாடலின் கருத்தைச் சிந்திக்கின்றோம் இந்தப் பத்துப் பாசுரங்களை ஒதுபவர்கள் திருநாட்டில் திருவனந் தாழ்வான் முதலிய நித்திய சூரிகளுடன் கூடி வாழப் பெறுவர் என்பதை நினைந்து பரிபூர்ண பிரம்மாநந்தம் பெற்ற மனநிறைவுடன் திருக்கூடலூரை நோக்கிப் பயணமாகின்றோம். 11. நூற். திரு. அந் 33