பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் } 43 பாகவதர்கட்கு ஆட்படிருத்தலாகிய பெருஞ்செல்வம் கிடைக்கப் பெறுவதாமாகில் எத்தனைப் பிறப்புகள் நேர்ந்தாலும் விருப்பமே என்கின்றார். ஏறாளும் இறையோனும்’ (4-8:1) என்ற திருவாய்மொழியில் மாறு ஆளன் கவராத மணிமாமை குறைவு இலம்’ என்பதனால் அடிமைக்குப் புறம்பாக உள்ளவையான ஆன்மா, ஆன்மாவுடன் சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாம் விடத்தக்கவை என்ற எதிர்மறை முகத்தாலே அடிமையே ஆன்மாவிற்குச் சொரூபம் என்பதனை உணர்த்துகின்றார். கண்கள் சிவந்து (8.8:1) என்னும் திருவாய்மொழியில் 'ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே என்பதனால் பகவானுக்கு இந்த ஆன்மா சரீரமாக இருப்பதனாலே “மையாய், சரீரத்தைக் காட்டிலும் வேறாய், ஞானானந்த லட்சணமாய் இருக்கும் என்பதனைக் காட்டுகின்றார். கருமாணிக்கமலைமேல் (8.9-1) என்ற தோழி பாசுரமாகச் செல்லும் திருவாய்மொழியில் அநந்யார்ஹத்துவம் வெளியிடப் பெறுகின்றது. ஆக இந்த நான்கு திருவாய்மொழிகளாலும் ஆன்ம சொருபம் (உயிரின் நிலை) வெளியிடப் பெறுகின்றது. விரோதி சொருபத்தைக் காண்போம். விடுமுன் முற்றவும்’ (1.2) என்று தொடங்கும் திருவாய்மொழியின் மூன்றாம் பாசுரத்தில் 'நீர்நுமது என்று இவை வேர்முதல் மாய்த்து என்பதனால் 'யான்' என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப்பற்றையும் விட்டொழிக்க வேண்டும் என்கின்றார். சொன்னால் விரோதம் (3.9:1) என்ற திருவாய்மொழியில் என்னப்பன் எம்பெருமான் உளனாக, என் நாவில் இன் கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் என்பதனால் அடிமை செய்யத்தகாதவர்களுக்கு அடிமை செய்தல் விடுதற்கரியது என்பதை அருளிச் செய்கின்றார். ‘ஒரு நாயகமாய் (4-1:1) என்ற திருவாய்மொழியில் ஒரு நாயகமாய் உலகுடன் ஆண்டவர், பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்' என்பதால் ஐசுவரியம் நிலையற்றது என்பதை எடுத்துரைக்கின்றார். இத்திருவாய்மொழியின் ஒன்பதாம் பாசுரத்தில், படிமன்னு பல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன்வென்று, செடிமன்னு காயம் செற்றார்களும், குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் என்பதனால் துறக்க வாழ்வும் நிலையற்றது என்பது காட்டப் பெறுகின்றது. பத்தாம் பாசுரத்தில் இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் என்பதனால் கைவல்யமும் நிலையற்றது என்பதைத் தெளிவுறுத்துகின்றார். கொண்ட பெண்டிர் (9-1:1) என்ற திருவாய்மொழியில் கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் கற்றத்தவர் பிறர், கண்டதொடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை’