பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி என்பதனால் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற உறவு முறையினர் விரும்பத்தக்கவர் அல்லர் என்பதனைக் காட்டுகின்றார். இங்ங்னம் இந்த நான்கு திருவாய்மொழியாலும் விரோதி சொருபத்தைத் தெளிவாக்கு கின்றார் ஆழ்வார். உபாய சொருபத்தையும் காண்போம். "நோற்ற நோன்பிலேன் (573) என்ற திருவாய்மொழியின் ஆறாம் பாசுரத்தில் ஆறு எனக்கு நின்பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் என்று கூறி "நோற்ற நோன்பிலேன்' என்பதனாலும் ஆராஅமுதே' (5.8) என்ற திருவாய்மொழியின் எட்டாம் பாசுரத்தில் களைவாய் துன்பம்; களையாது ஒழியாய், களைகண் மற்றிலேன் என்று வேறு கதி இல்லாமையயைக் கூறி கழல்கள் அவை சரணாகக்கொண்ட (5. 8:11) என்று சரணாகதியைக் குறிப்பிட்டதனாலும், மானேய் நோக்கு மடநல்லீர் (5-9:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் வைகலும் வினையேன் மெலிய என்று பக்தியின் வசப்பட்டமையைக் குறிப்பிட்டு இறுதிப் பாசுரத்தில் ‘நம்பெருமான் அடிமேல் செமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் என்று கூறியதனாலும்; 'பிறந்த வாறும் (5-0:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் 'எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இச்சிறந்த வான்சுடரே என்று தரித்து நின்று அவன் குணங்களை நினைக்க முடியாதவாறு உருக்குலைந்தமையைக் குறிப்பிட்டு நாகு அணைமிசை நம்பிரான் சரனே சரண் நமக்கு என்று நாடோறும் ஏக சிந்தையனாய் என்று கூறியதனாலும் உபாய சொரூபம்’ (நெறியியல்) விளக்கம் அடைகின்றது. இறுதியாக புருஷார்த்த சொரூபம் (வீட்டின் இயல்) பற்றிய விளக்கத்தைக் காண்போம். எம்மா வீட்டுத் திறமும் செப்பம் (2.9:1) என்ற திருவாய்மொழியின் நான்காம் பாசுரத்தில் தனக்கேயாகும் எனைக் கொள்ளும் ஈதே’ என்பதனால் தான் செய்யும் கைங்கரியத்தில் தன் பொருட்டாகச் செய்தலாலாய இன்பம் வேண்டா என்று விரும்பியதனாலும், ஒழிவில் காலம் எல்லாம் (3.3:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுஇலா எல்லா அடிமைகளையும் செய்யவேண்டும் என்று பாரித்தமையாலும்; 'நெடுமாற்கு அடிமை” (8.10) என்ற திருவாய்மொழியில் கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் (1) என்பதனாலும், சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி என்பதனாலும் பகவானுக்குச் செய்யும் கைங்கரியம் பாகவதர்களுக்குச் செய்யும் தொண்டின் அளவாக முடியவேண்டும்’