பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் ł45 என்று கூறுவதனாலும்; "வேய்மருதோளிணை (10.3) என்ற திருவாய்மொழியின் ஒன்பதாம் பாசுரத்தின் ‘உன்தன் திருவுள்ளம் இடர்கெடும் தோறும் என்றவதனால் அவனுடைய மன நிறைவே பேறாக இருக்க வேண்டும் என்பதைச் சொன்னதாலும் பல சொருபத்தைச் சொன்னவாறாயிற்று. இங்ங்னம் இருபது திருவாய்மொழிகளில் தெளிவாக அருளிச் செய்து மற்றைய எண்பது திருவாய்மொழிகளாலும் அந்த ஐம்பொருள் தன்னையே விரித்துப் பேசுவர் ஆழ்வார் என்பது ஆசார்யர்களின் திருவுள்ளம். இதனையே, மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையும் வாழவினையும் ஒதும் குருகையர்கோன் யாழினிசை வேதத்து இயல்.’ (தொக்கு இயலும் . சேர்ந்து கிடக்கும்; ஊழ்வினை . முன்னைய வினைகள்; வாழ்வினை - புருஷார்த்தத்தை) என்ற திருவாய்மொழித் தனியன் சுருக்கமாக உரைக்கின்றது. திருவாய்மொழியில் துவயத்தின் பொருள் நுவலப் பெறுகின்றது என்பதைப் பிள்ளை உலக ஆசிரியர் சாரசங்க்ரஹம் என்ற இரகஸ்ய நூலில் தெளிவாக விளக்குவர்.' இந்தத் தத்துவக் கருத்துகள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் திருக்கூடலூர் என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகின்றோம். இந்தத் திவ்விய தேசம் ஆடுதுறைப் பெருமாள் கோயில்’ என்ற திருநாமத்தாலும் வழங்கி வருகின்றது. இத்திருத்தலம் மயிலாடுதுறை - திருச்சி இருப்பூர்தி பாதையில் அய்யம்பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இப்படி வருவதை விடக் கும்பகோணத்திலிருந்து கும்பகோணம் தஞ்சை வழியில் பேருந்து மூலம் வருவதே சிறந்தது; அல்லது திருவையாற்றிலிருந்தும் கும்பகோணம் செல்லும் பேருந்திலும் வரலாம்; நேராகக் கோயிலருகிலேயே இறங்கலாம். அய்யம்பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து வந்தால் மாட்டுவண்டி அல்லது குதிரை வண்டியில்தான் வருதல் வேண்டும். திருவையாற்றிலிருந்து வந்தால் இதனைச் சேவித்த பிறகு திருக்கபித்தலம், ஆதனூர் என்ற தலங்களைச் சேவித்துக்கொண்டு கும்பகோணம் வரலாம். கூடலூர் ஒரு சிற்றுார்; இங்குச் சத்திரங்களோ, தங்கும் விடுதிகளோ இல்லை; 2. திருவாய்மொழித் தனியன் 3. ஆசா. ஹிரு. 210