பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஒருசில சிற்றுண்டி விடுதிகள் உள்ளன. நாம் திருமணிக் கூடத்திலிருந்து மாட்டு வண்டியில் வருகின்றோம். இப்படித்தான் செல்லுமாறு திருநகரி வைணவர் நமக்கு ஏற்பாடு செய்தார். தேவர்கள் கூட்டமாகக் கூடி இத்தலத்து எம்பெருமானை வணங்கி வாழ்த்தியமையால் இத்திருத்தலம் கூடலூர் என்று திருநாமம் பெற்றதாகக் கூறுவர் பெரியோர்." திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் சாலையின் மீது இருக்கின்றது; இருபுறங்களில் வயல்களும் சோலை வளங்களும் சூழ்ந்துள்ளன. சோலைகளில் மணம் மிக்கதாய், குளிர்ந்ததாய், இனிமையான தேனைப் பருகின வண்டுகள் குறிஞ்சிப் பண்ணைப் பாடுகின்றன (2). மரக்கொம்புகளிலுள்ள வண்டுகள் தமக்கு வாய்ந்த இடங்களைத் துறந்து வயலில் ஏர் பிடித்து உழுகின்றவர்களின் தலைமுடியில் அணிந்திருக்கும் மலர்களில் உள்ள தேனை உணவாகக்கொண்டு இசை பாடுகின்றன (4). சோலைகளில் வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கின்றன (6). அங்கு முல்லைக் கொடிக் குருந்த மரத்தை முட்டாக்கிட்டுப் படர்ந்துள்ளன (7). படர்ந்த மட்டைகளையுடைய (இலைகளையுடைய) தென்னை மரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டாகிய இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கின்றபோது, குளங்களை இளநீராலே நிறைத்து மட்டைகளால் மறைத்து வைத்தாற் போலே இருக்கும் (8). ஆழ்வார் கூறும் வயல் வளத்தையும் காண்போம். நாரைகள் நீர்நிலைகளிற் சென்று அமர்ந்திருக்கும்; அவற்றின் கால்களில் சிறு மீன்கள் வந்து குத்தும்; குத்தினாலும் உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்றாற்போலே அவற்றைக் கவனியாது தாம் விரும்பி உட்கொள்ளும் பெருமீன்கள் வந்து கிட்டினவுடன் அவற்றின்மீது விழுந்து கொள்ளை கொள்ளும் (3). வண்டலிட்டிருக்கும் நீர்நிலைகளில் கெண்டை மீன்கள் செருக்கினால் துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல் மின்னினாற் போலே இருக்கும்; அதனைக் கண்ட மேகங்கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னலின் ஒளியே என்று கருதி மின்னலுக்கு அடுத்தபடி உண்டாக வேண்டிய இடிமுழக்கத்தைச் செய்கின்றன (5). வயல்களின் வாய்க்கால்களில் தாழம்பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட 4. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் திருக்கூடலூர் என்ற திருநாமம் பெற்ற இரண்டு தலங்கள் உண்டு. ஒன்று பாண்டி நாட்டைச் சேர்ந்த தென்மதுரை ஆகும். மற்றொன்று சோழநாட்டைச் சேர்ந்த இத்திருத்தலம் ஆகும். 5. இடியும் மின்னலும் ஒரே காலத்தில் தான் உண்டாகும். ஒளியின் வேகம் அதிகமாதலால் மின்னல் முதலில் தெரியும், ஒலியின் வேகம் குறைவாதலால் இடிமுழக்கம் பின்னர் கேட்கும்.