பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் 147 கெண்டை மீன்கள் குருகுகள் தம்மை இரை கொள்வதற்காக வந்து அசையாமல் நிற்கின்றன போலும் என்றெண்ணி அஞ்சி ஒளிக்கும் (9). இத்தகைய சூழ்நிலையிலமைந்த இத்திருத்தலம் எத்தகைய தென்னில் செங்காந்தள் மலர் போன்ற விரல்களையுடையவரும் மெல்லிய அழகிய ஆடைகளையணிந்தவர்களுமான நன்மட வார்களின் கூந்தல் மணம் கமழப் பெற்றதாக இருக்கும். இது 'கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலையும் கூந்தலுக்கு செயற்கை மணமேயன்றி இயற்கை மணம் இல்லையென்று இறையனாரிடம் வாதிட்ட நக்கீரரையும் அதனால் அவருக்கு நேர்ந்த விளைவினையும் நினைக்கச் செய்கின்றது. இனி, ஆழ்வாரின் இறையநுபவத்தையும் காண்போம். இந்த எம்பெருமானை, தாம்தம் பெருமை அறியார், தூது வேந்தர்க்கு ஆய வேந்தர்.' என்கின்றார். எம்பெருமான் எல்லாம் அறிந்தவன் என்றும், எல்லா வல்லமையும் பெற்றவன் என்றும் வேதவேதாந்தங்களில் நுவலப் பெற்றாதால், அவன் தன் பெருமையைத் தானறிய வல்லனவனல்லன்; உனக்கு இவ்வளவு பெருமை உண்டு என்று பிறர் சொல்லக் கேட்பவனேயன்றி தன் பெருமை தானறியாதவன். எம்பெருமானுக்குப் பெருமை பரத்துவம் பொலிய நிற்கும் இருப்பன்று. ஏவிய செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கும் இருப்பே இங்கு பெருமை எனப்படுகின்றது. பாண்டவர்கட்காகக் கழுத்திலே ஓலை கட்டித் துது சென்று பாண்டவர் தூதன்' என்று பேர் பெற்றான். இப்படி இழிதொழில் செய்தாலும், இவனுடைய செளலப்பிய குணம் அறிவிற் சிறந்தோரால் ஈடுபடும்படியாகவே இருக்கும். அரசர்க்கரசன் என்ற பெருமையும் மிக்குத் தோன்றும். இந்த எம்பெருமான் நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக கொழுத்த ஏழு காளைகளை வலியடக்கின வீரன் (2). எல்லா வல்லமையும் உடையவன். தயிருண்ணப் பார்க்கின்றான்; தன் விருப்பம் இந்த இருப்பால் நிறைவேறாதென்று, அதற்காகப் பிள்ளைவடிவு கொண்டு தயிரமுது செய்கின்றான்; இதனால் தன் நீர்மையைக் காட்டுகின்றான் (3) கண்டார் கண்ணைக் கவரும் மன்னு குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து கூடி மண் இரந்து பெற்றவன் (4). அடியார்கள் 6. குறுந் 2 7. பெரி. திரு. 5.21