பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 48 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி துதிக்கும்படியாகத் தன்னுடைய கோலத் திருமேனி சூரிய மண்டலத்தையும் போய்த் தொட வளர்ந்து அண்டமெங்கும் பரவி நின்ற உத்தமன் (5). தக்கன் வேள்வியை அழித்த சங்கரன் சாபத்தைத் தீர்த்த பெருமான் (6). கடல்கள், மலைகள் முதலானவற்றோடு கூடிய உலகங்களையெல்லாம் பிரளயம் கொள்ளாதபடித் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்த பெருமான் (7). திருநீர்மலையிலெழுந்தருளியுள்ள பெருமானே இங்கும் எழுந்தருளியுள்ளான் (8) ஆற்றுப் பெருக்கு போல் பெருகா நின்றுள்ள காதலைக் கொண்ட ஆழ்வாரின் இதயம் உருகும்படியாக உட்புகுந்த பெருமான் (9). இத்தகைய எம்பெருமான்தான் திருக்கூடலூரில் எழுந்தருளியிருப்பவன். இந்த இறையநுபவத்துடன் திருக்கோயிலில் நுழைகின்றோம். “காவிரிப் பெருநீர் வண்ணன் கண்ணனைத் தரிசிக்கின்றோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் வையம் காத்த பெருமாளைக் கண்ணாறக் கண்டு களிக்கின்றோம். தாயாரின் திருநாமம் பதுமாசன வல்லி. இவரையும் சேவித்து இவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். எம்பெருமான் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்களை ஓதி உளங் கரைகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாடல் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். உண்டுகேட் டுற்றுமோந் துப்பார்க்கும் ஐவர்க்கே தொண்டு படலாமோ உன்தொண்டனேன் - விண்டிலங்கும் ஆடலூர் நேமிமுதல் ஐம்படையாய் அன்புடையாய் கூடலூராய் இதனைக் கூறு." (உற்று - பரிசித்து, ஐவர் - ஐந்து இந்திரியங்கள்; தொண்டு . அடிமை விண்டு விட்டுவிட்டு; ஆடல் ஊர் - வெற்றி பொருந்திய நேமி - திருவாழி) என்பது பாடல். “மெய் வாய் கண் செவி முக்கு என்னும் ஐம்பொறிகளுள் கண் எம்பெருமானையே தரிசிக்க வேண்டும்; செவி பெருமான் பெருமைகளையே கேட்க வேண்டும்; வாய் அவனைத் துதிக்க வேண்டும்; முக்கு அவனது திவ்விய மணத்தை முகர வேண்டும்; கைகால் தலை முதலிய உறுப்புகளையுடைய மெய் அவ்வெம்பெபருமானைத் தொழுதல், வலம் செய்தல், வணங்குதல் முதலியன செய்தல்வேண்டும். இங்ங்னம் எல்லாப் பொறிகளும் சர்வேசுவரனான எம்பெருமானது விஷயங்களையே நுகரும் 8. திவ்விய தேசத்தில் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் யாவரும் ஒருவனே என்ற உண்மையைத் தெரிவித்தவாறு. 9. நூற். திருப். அந் 25