பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருமணிக்கூடத்து நாயகன் வைணவ சமயத்தின்படி ஆன்மா ஒளி பெறுவது நலம் அந்தம் இல்லதோர் நாட்டில் தான். இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாதிருப்பது; அதுபோல அவ்வுலகம் இன்பங்களுக்கு அந்தம் இல்லாதிருப்பது. அந்தம் இல்லது என்பதை நலம், நாடு என்ற இரண்டிற்கும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அந்தம் இல்லது ஓர் நாடு அழிவில்லாத ஒப்பற்ற நாடு. நலம் அந்தம் இல்லதோர் நாடு - அழிவில்லா இன்பத்தையுடைய நாடு. நலம் - இன்பம்; நாடும் அழிவில்லாதது; அதனை அடைந்தார்க்கு உண்டாகும் இன்பமும் அழிவில்லாதது. அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்றார் பரிமேல் அழகர். வீட்டுலகத்தில் ஆன்மா இறைவனுக்குச் செய்யவேண்டிய கைங்கரியத்திற்கு ருசி பிறக்க வேண்டிய இவ்வுலகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்தலை வைணவ சமயம் பரிந்து பேசுகின்றது. நம்மாழ்வாரும், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி விழுவிலா அடிமை செய்யவேண்டும்" (ஒழிஇல் - ஒய்வில்லாத உடனாய் - உடனே இருந்து; அடிமை கைங்கரியம்) என்று திருவேங்கடமுடையான் திருவடிகளில் எல்லாவித அடிமைகளும் செய்யவேண்டும் என்று பாரிக்கின்றார். அந்தோ கீழே வெகு காலம் வீணாகக் கழிந்துவிட்டதே என்கின்ற இரவு நெஞ்சிற் படாதபடி அதனை மறந்து ஆனந்த மயமாகக் கைங்கரியம் பண்ணப் பாரிக்கின்றார்’ என்பதேயாம். கைங்கரியம் செய்வதிற்காட்டிலும் செய்யவேண்டும் என்கிற பாரிப்புநிலை 1. திருவாய். 2.8:4 2. அறத்துப்பால் - உரைப்பாயிரம் 3. கைங்கரியம் - கிங்கரனது செயல். கிங்கரன் - தனக்கு என்று ஒரு பயனையும் கருதாது, தலைவனது விருப்பின்படியே செய்பவன். எதையும் செய்பவன் என்றவாறு. 4. திருவாய். 3.31.