பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணிக்கூடத்து நாயகன் 153 தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடம்." (தேம்பொழில் . தேன்மிக்க சோலை) என்று கூறி சோலை வளத்தைக் காட்டுகின்றார். காவிரியாற்றின் பாய்ச்சல் எங்கும் பரவிக் கண்ட விடங்கள் எங்கும் பொற்குவியல்கள் குவிக்கப் பெற்றுள்ளன; எம்மருங்கும் தேன்மிக்க சோலைகள் உள்ளன. மங்கைமார் தங்கள் கொங்கைத் தடத்தில் அணிந்திருந்த குங்குமச் சேறுகள் தீர்த்த மாடுங்கால் நீரில் கழுவ, அவற்றோடு கூடிப் பெருகும் காவியாற்று நீர் நறுமணம் கமழுகின்றது (2). சோலைகளில் குரங்குகள் முந்துற தேமாங்கனிகளைப் புசித்து அதன் சுவை தெவிட்டவே, அதனை மாற்றுவதற்கு வாழைப் பழங்களை நுகர்கின்றன; அப்போது மதுவைப் பருகுவதற்காக ஏற்கெனவே அப்பழங்களில் படிந்திருந்த வண்டினங்கள் வெருவி ஒடுகின்றன (4). பொதிய மலையினின்றும் நறுமணத்துடன் புறப்பட்ட தென்றல், மன்றங்கள் வயல்கள், காவுகள், மாடங்கள் இவைதோறும் புகுந்து வீசுகின்றது (7). தாமரைப் பூவில் தேன்வெள்ளம் அதிகமாகி நீரில் பெருகுகின்றது; அதனைப் பருகுவதால் கொழுத்த வாளை மீன் களிப்பாலே பாய்கின்றன; செங்கயல் அதைக் கண்டு அஞ்சித் துள்ளி வேறிடத்திலுள்ள நீர்நிலைகட்குப் பெயர்கின்றன (8). இவ்வூரிலுள்ளார் வேதங்களைக் கற்றுத் துறைபோய வித்தகர்கள்; இவர்கள் ஆசையுடன் அறங்களை அநுட்டித்துக் கைவண்மை யால் தீவளர்த்து ஓம்புகின்றனர் (3). பண்டொருகால் பாண்டிய மன்னன் படையெடுத்து வந்தபொழுது அவனை வெருட்டி ஒட்டிவிட்டனர் இவ்வூரிலுள்ள அந்தணர்கள், பிறிதொரு சமயம் சோழ அரசனையும் அவர்கள் அப்படியே தோற்கடித்து ஒட்டினராம் (6). இந்த ஊர்த் திருமாளிகைகள் சந்திர மண்டலத்தையும் எட்டும்படியாக உள்ளன (10). இன்று இச்சூழ்நிலை சிறிதேனும் இல்லை. கடவுளே கைவிட்ட இடத்தைத்தான் (God forsakenpalce) காண முடிகின்றது. ஏதோ ஓரளவு தோப்புகள் உள்ளன; அவ்வளவே. இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சிந்திக்கின்றோம். இவன் கசேந்திரனின் துயரைத் தொலைத்தருளினவன்; கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கோநிரையைக் காத்தருளிய கோமான் (1). பூதனையின் நஞ்சுதோய்ந்த முலையை உண்பதுபோல் பாவனை செய்து அவள் உயிரை உறிஞ்சியவன்; இலங்கைமீது கடுமையான சரங்களைச் செலுத்தி இராக்கதப் பூண்டுகளை அழித்தவன் (2). குதிரை வடிவாக 13. பெரி. திரு. 4.51