பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி வந்த கேசி என்னும் அரக்கனை வாய்கிழித்து வானுலகுக் கேற்றியவன்; இரட்டை மருத மரங்கள் இற்று முறிந்து விழும்படி தவழ்நடை கற்றவன். ஏழு காளைகளை அடக்கிப் பின்னைப் பிராட்டியை மணந்தவன் (3). குவலயா பீடம் என்னும் யானையின் தந்தங்களைப் பறித்து யானையையும் பாகனையும் கொன்றவன்; குருந்த மரத்தை முறித்தொழித்த கோவலன் கொக்கு வடிவமாக வந்த பகாசுரன் என்ற அசுரனை வாயைக் கிழித்து வானுலகுக்கு அனுப்பியவன் (4). சூர்ப்பணகையின் காதையும் முக்கையும் முலைக் கண்களையும் வாளால் தடிந்தவன்; பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தன்னைவிட்டுப் பிரியாதவர்களாகப் பொருந்தியிருக்கப் பெற்றவன் (5). மீன், வாமனன், அன்னம், வராகம், நரசிம்மம், ஹயக்ரீவன் என்ற அவதாரங்களை எடுத்தவன். அண்டமும் சூரியனும் சந்திரனும் மற்றுமுள்ள பொருள்களும் தானாகவே இருக்கப் பெற்றவன் (6). குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு நின்றவெஞ் சுடரும் எல்லா நிலைகளும் ஆய எந்தைதான்.() திருமணிக் கூடத்தில் எழுந்தருளியுள்ளான். இவன்தான். சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும்.இத் தரணி ஒம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை (8) (சங்கை - ஐயம்; தரணி - பூ மண்டலம், ஒம்பும் . பாதுகாக்கும் முகில் - மேகம்) ஆவான், மேலும், பாவமும் அறமும் விடும் இன்பமும் துன்பந் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை (9) இவனே யாவான். மும்மூர்த்திகளும், முனிவர்களும், தேவர்களும் வந்து இவனை வணங்குவார்கள். கீழ்க்கூறியவாறு எம்பெருமானைச் சிந்திக்கும் நிலையில் நம் மாட்டுவண்டித் திருத்தலத்தை வந்தடைகின்றது. எம்பெருமான் வரதராசன் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இவர்களுடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். எம்பெருமானின் திருநாமம் மணிக்கூட நாயகம். திருமாமகள் நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். இவர்களை வணங்கி இவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் சந்நிதியில் மிடற்றொலிகொண்டு ஓதி உளங்