பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணிக்கூடத்து நாயகன் 155 கரைகின்றோம்; பரிபூர்ண பிரம்மாநுபவம் பெற்ற நிலையை அடைகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவுக்கு வர அதனையும் ஒதுகின்றோம். சேராது முன்செய்த தீவினை பின்செய்வதுவும் வாராது; இனிநீ மடநெஞ்சே - நேராகக் குருமணிக் கூடத்தானைக் கொம்புபறித் தானைக் திருமணிக் கூடத்தானைச் செப்பு." முன் செய்தத வினை - சஞ்சிதம்; பின்செய்வது . ஆகாமியம் வாராது . அணுகாது; குருமணி , உயர்ந்த இரத்தினங்கள்; கொம்பு - தந்தம்; செப்பு . துதிசெய். என்பது பாசுரம். திருமணிக் கூடத்தானின் திருநாமத்தைச் சொன்ன மாத்திரத்தில் அவனருளால் அளவின்றி ஈட்டப்பெற்ற வினைத்திரளில் அநுபவித்தவை போக எஞ்சியவை தீயினில் தூசாகும்; இனி செய்யும் வினைகளும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போல அழிந்தொழியும் என்கின்றார் அய்யங்கார். மனநிறைவுபெற்ற நிலையில் காவளம்பாடியை நோக்கி நம் பயணம் தொடர்கின்றது. 14. நூற். திருப். அந் 37