பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி காவளம்பாடி எந்தவித வசதிகளும் இல்லாத ஒரு சிற்றுார். இத்திருத்தலம் திருநாங்கூர்த் திருப்பதிகளில் ஒன்பதாவதாகும். திருமங்கையாழ்வார் இத்திருப்பதி எம்பெருமானை ஒரு திருமொழியால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திருமொழிப் பாசுரங்களில் நாங்கை நாட்டுவளம் ஓரளவு காட்டப்பெறுகின்றது. நாங்கைநாட்டு நீர்நிலைகளில் கயல்மீன்கள் அச்சத்தால் துள்ளியோடுகின்றன; மலர்களில் வண்டுகள் ஆரவாரத்துடன் தேனை நுகர்ந்து இன்புறுகின்றன (4). நாட்டின் சோலைகளின் நீழலில் நறுமணம் நிறைந்து காணப்பெறுகின்றது (6). சோலைகளில் எங்கும் நறுமலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; கால்வாய்கள் தோறும் நீர் பாய்ந்தோடிய வண்ணம் உள்ளது (7, 8). சோலைகள் எங்கும் அழகிய மயில்கள் தோகைகளை விரித்தாடுகின்றன (9). பருத்தெழுந்துள்ள பலா மரங்களிலும் மாமரங்களிலும் நறுமணம் வீசும் கனிகள் பழுத்துத் தொங்குகின்றன; இவை கனிந்து விழுந்து தேன் வெள்ளமிடப் பெற்றனவாகத் திகழ்கின்றன (3). திருநாங்கூரில் விண்ணளாவிய பெரிய மலைகள் போன்ற மாடமாளிகைகள் பொருந்திக் காணப் பெறுகின்றன (5). இவற்றில் நான்மறை வல்ல அந்தணர்களும் பகைவர்களை விரைவில் சென்று ஒழிக்கவல்ல வீரர்களும் வாழ்கின்றனர் (1, 2). திருப்பாசுரங்களில் பரத்துவநிலை எம்பெருமான், அவதாரநிலை எம்பெருமான்கள் சேவிக்கப் பெறுகின்றனர். முதலையால் கவ்வப் பெற்று ஆயிரம் திருநாமங்களை அநுசந்தித்த கஜேந்திராழ்வானின் இடர் களைந்த எம்பெருமான் அநுசந்திக்கப் பெறுகின்றான் (1). ஆதிவராகமாகி அண்ட பித்தியில் அழுந்திக் கிடந்த பூமியைக் கொணர்ந்தவன்; மாவலின் யாக பூமியில் வாமன மாணியாக எழுந்தருளிக் குறையிருந்தவன் (2). இராமனாக வந்து வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு மகுடம் சூட்டியவன் (3). இராவணனுடைய பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி வீடணனுக்கு அரசை அளித்தவன் (4). கண்ணனாக வந்து காளியன் என்ற நாகத்தின்மீது பல்வேறு நர்த்தனங்களைச் செய்தவன் (5). மல்லர்களைக் கொன்று பாரதப் போரில் பல்லாாயிரம் அரசர்களை நாசமடையச் செய்தவன் (6). தருமபுத்திரனுக்கு அரசளிக்க விரும்பித் தூதுபோனவன்; குவலயா பீடத்தையும் அதன் பாகனையும் கொன்றொழித்தவன் (7). சத்தியபாமைக்காக தேவேந்திரனைச் செற்று, விரைந்து நந்தவனத்தின் அழகை அளித்து கற்பகத் தருவினைப் பூமிக்குக் 6. பெரி. திரு. 4.6