பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவளம் பாடிக் கண்ணன் 1.59 கொண்டு வந்தவன் (8). காயத்ரி, த்ரிஸ்டுப், ஜகதீ, அநுஷ்டுப், பங்க்தி என்று சொல்லப்பெறும் சந்தஸுக்களிலெல்லாம் தானாக இருப்பவன்; எழுத்துகளின் எண்ணிக்கையைக் கொண்டு சந்தஸ்யைகளின் பெயர்களை அறுதியிட்டவன், பஞ்ச பூதங்கட்கு நியாமகன்; காரியப் பொருள்கள் யாவும் அழிந்து கிடந்த காலத்து எல்லாம் தன் பக்கலிலே ஐக்கியமாகித் தானொருவனே என்னும்படி நிலைபெற்றிருப்பவன்; இவற்றையெல்லாம் பாகுபாடு செய்து காரியங்கொள்ள நினைத்த காலத்து இவற்றுக்கெல்லாம் காரணபூதனாக நின்றவன்; இவ்விதமாக அருமறைகளால் உணர்த்தப்படுபவன் (9). இப்படிப்பட்ட எம்பெருமானே காளம்பாடித் திருக்கோயிலில் சேவை சாதிப்பவன் என்று ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் திருக்கோயிலில் புகுகின்றோம். நின்ற திருக்கோலத்தில கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் கோபால கிருஷ்ணனை வணங்குகின்றோம்; கண்ணன் என்ற திருநாமத்துடனும் இந்த எம்பெருமான் வழங்கப் பெறுகின்றான். தாயாரின் திருநாமம் மடவரல் நாங்கை செங்கமலவல்லி நாச்சியார். இவரையும் வணங்கி இவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். எம்பெருமானின் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்களை மிடற்றொலிகொண்டு ஓதி உளங்கரைகின்றோம்; “காவளம் பாடிமேய கண்ணனே; களைகண் நீயே என்று ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வேண்டும் ஆழ்வார் வாக்கிலேயே நாமும் இறைஞ்சுகின்றோம். இந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். செப்பேன் மனிதருக்குஎன் செஞ்சொல் தமிழ்மாலை கைப்பேன் பிறதெய்வம் காண்பாரை-எப்போதும் காவளம்பாடித் திருமால்கால் தாமரை தொழுது நாவளம்பாடித் திரிவேன் நான்.' (செப்பேன் - பாடேன்; செஞ்சொல் - இன்சொல்; பிறதெய்வம் . திருமாலை யன்றி வேறு கடவுள் கைப்பேன் - வெறுப்பேன்; நா - (எனது) நாவினால், வளம்பாடி . வளமாகக் கவி பாடி, திரிவேன் - காலம் கழிப்பேன்) 'உலகப் பற்றுக்கு ஏதுவான மனித வழிபாட்டை நீக்கி, பிற தெய்வ வழிபாடு செய்பவர்களை வெறுத்தொதுக்கி வீடுபேற்றிற்கு ஏதுவான திருமால் திருவடிகளின்மீது கவிதைகள் யாத்து வழிபட்டுப் பொழுது போக்குவேன்' என்கின்றார். மறந்தும் புறந்தொழா வீர 7. நூற். திருப். அந் 38