பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi சொல்லுவதுண்டு. ஆனால், பெரியவாள் முகத்தில் கருணையே வெள்ளமிட்டுப் பொழிவதைக் கண்டேன். கருணை வடிவத்தைக் காணும்போது மெய்மயிர் சிலிர்த்து உள்ளம் பொங்கியதை அநுபவித்தேன். நாராயண மந்திரத்தைத் தாரகமாக கொண்டிருப்பவர் என்பதையும் கேள்வியுற்றேன். இவரைத் தரிசிக்கும்போது உபநிடத முனிவர்கள் என் மனக்கண்முன் காட்சி தருகின்றனர். இத்தகைய பெரியவாள் திருவடிகளில் இந்த நூலை பக்திப் படையலாக்குவதைப் பெறற்கரிய பெரும் பேறாகக் கருதுகின்றேன். இவருடைய ஆசியால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஆசாரியர்களின் உரைகளிலும் அடியேனுக்குத் தெளிவும் பக்தியும் மேலும் மேலும் பெருகி அடியேனை உய்விக்கும் என்பது அடியேன் திடமான நம்பிக்கை. இதுசமயம் நம்மாழ்வாரின், ஆம்முதல்வன் இவன் என்று தன்கேற்றி, என் நாமுதல் வந்து புகுந்து நலஇன்கவி துமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னனன் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?” என்ற திருவாய்மொழியைச் சிந்திக்கின்றேன். அன்பர்கட்காக அடியேனைக் கொண்டு தன்னைக் கவிதை பாடிக் கொண்ட பேருதவி செய்தவனை ஒரு நாளாவது மறக்க முடியுமா? என்று கேட்பதைப் போலவே அடியேனைக் கொண்டு மன்பதை இறையதுபவத்தைப் பெற்று உய்வதற்காக திருத்தலப் பயணக் கட்டுரைகளை எழுதுவித்து, திருமலை -திருப்பதி தேவஸ்தானத்தாரால் நிதிஉதவிச் செய்து இந்நூல் வெளிவரக் காரணமாக இருக்கும் ஏழுமலையப்பனை ஒரு நாளாவது மறக்க முடியுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. இங்ங்னம் எல்லா நலன்களையும் ஈந்து அடியேனை இயக்கி நன்னெறிப்படுத்தி வரும் திருவேங்கடமுடையானை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி இறைஞ்சி வணங்குகின்றேன். வெற்புஎன்று வேங்கடம் பாடினேன் விடுஆக்கி நிற்கின்றேன் நின்றுநினைக் கின்றேன் கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண்." - திருமழிசை ஆழ்வார். - ந. சுப்புரெட்டியார் 4. திருவாய். 7-9:3 5. நான். திருவந். 40