பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஆழ்வார் இப்படி அநுபவிக்கும்போது தோழி பாசுரம், தாய் பாசுரம், மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளாகப் பாசுரங்கள் அமையும். இப்போது ஆழ்வார்க்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பரகாலநாயகி என்ற பெண்மைப் பெயர் வழங்கப் பெற்று வரும். தோழி சொல்லுவது போலவும், தாய் சொல்லுவது போலவும், தலைமகள் சொல்லுவது போலவும் பாசுரங்கள் வெளிவந்தாலும், பாசுரங்களைப் பகர்பவர் ஆழ்வார்களேயாவார். ஓர் ஆறு பல வாய்க்கால்களாகப் பிரிந்து சென்றாலும் அவற்றுக்கு முக்கியமான பெயர் ஒன்றேயாக இருக்குமாப்போலே, இம்மூன்று நிலைகளில் சொல் மாலைகள் வடிவு கொண்டாலும் “மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும். நாயகி வாக்காக வடிவு கொள்ளும் பதிகங்களின் இறுதிப் பாசுரம் ஆழ்வார் தாமான நிலையிலிருந்து பேசுவது போலவே நிறைவு பெறும். எம்பெருமானைப் பற்றிக் கூறும் நூல்களில் திருமங்கையாழ்வார் அருளியுள்ள பெரிய திருமொழியும் ஒன்று. பொதுவாக இவ்வாழ்வாரின் பாசுரங்கள், நெஞ்சுக்கு இருள்கடி தீபம், அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ் நனனுால துறைகள அஞ்சுக்கு இலக்கியம், ஆரண சாரம்; பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறி" இருள்கடி . இருளைப் போக்க; அடங்கா - ஒன்றுக்கும் அடங்காத துறைகள் ஐந்து - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, ஆரணம் . வேதம்; பரசமயம் - புறமதங்கள்) என்று போற்றப்பெறுகின்றன. பெரிய திருமொழியில் ஆழ்வார் எம்பெருமானை 118 பதிகங்களால் அநுபவித்து இனியராகின்றார். இவற்றுள் ஆழ்வார் தாமான தன்மையில் பேசியவை 98 பதிகங்கள்; பெண் பாவனையில் பேசியவை 20 பதிகங்கள் இவற்றுள் தாய் பாவனையில் பேசியவை ஏழு பதிகங்கள்; மகள் பாவனையில் பேசியவை பதின்மூன்று பதிகங்கள், தோழி பாவனையில் பேசியவை இவ்வாழ்வாரிடம் ஒன்று கூட இல்லை. இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் காவளம்பாடியிலிருந்து பார்த்தன் பள்ளியை வந்தடைகின்றோம். 3. பெரி. திரு. 5.7:10 4. தனியன்