பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கூடத்துச் செங்கண்மால் 5 மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ? காகுந்தா! காரிய கோவே!" இதில் ஆழ்வார் தன்னைத் தயரதனாகவும் இராமபிரானைத் தன் மகனாகவும் நினைந்து புலம்பும் பாசுரம் கல்நெஞ்சத்தையும் கரைக்கும் தன்மையதாக அமைந்திருப்பதைக்கண்டு மகிழலாம். ஒரு சமயம் இராமாயணக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது இராமபிரான் எண்ணிறந்த சேனையோடெதிர்த்த கர துடணாதியரை யாதொரு துணையுமின்றி எதிர்த்துப் போருக்குச் சென்றார் என்ற கட்டத்தில் கதை வரும்போது ஆழ்வார் அந்நிகழ்ச்சி அன்றுதான் நடைபெறுவதாக நினைத்து தம் சேனைகளையெல்லாம் போருக்குச் சித்தமாய் முன் செல்லுமாறு பணித்தார் என்றும், சிறந்த சிந்தனையாளராகிய கதை சொன்ன புராணிகர் பகைவர்கள் அனைவரையும் தாம் ஒருவராகவே போர் செய்து வென்றார் என்றும், ஆழ்வாரும் சேனையைத் திருப்பிக் கொண்டு பயணத்தை நிறுத்தினார் என்றும் வழங்கும் செவிவழிச் செய்தியும் இவரது இராமபக்தியின் உறைப்பினைத் தெளிவுறுத்துகின்றது. தில்லைக் கோவிந்தராசரை ஆழ்வார் இராமபிரானாகவே காண்கிறார். அர்ச்சாவதார மூர்த்தியை விபவாவதாரமாகவே கண்டு மகிழ்கின்றார். இராமபிரானது வரலாற்றை வால்மிகி பகவான் பேசியநுபவித்ததைப் போலவே தாமும், பேசி அநுபவிக்கின்றார் ஒரு திருமொழியில். ஆழ்வாரில் மனத்திரையில் இராமபிரான் ‘உலகனைத்தும் விளக்கும் சோதியாகவும், வெங்கதிரோன் குலத்து விளக்காகவும், செங்கண் நெடு கருமுகிலாகவும் விண் முழுதும் உய்யக் கொண்ட வீரனாகவும் காட்சி அளிக்கின்றார். பெருமானை ‘எங்கள் தனி முதல்வன் என்றும் ‘எம்பெருமான் என்றும் போற்றிப் புகழ்கின்றார்." இராமபிரானின் வாழ்க்கையில் நேரிட்ட ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் ஆழ்வாரின் மனத்திரையில் இடம்பெறுகின்றது. தாடகை வதம், விசுவாமித்திரரது வேள்வி காத்தல், வேள்விக்கு இடையூறு விளைவித்த கபாகுவை வானுலகுக்கேற்றல், மாரீசனைக் கடலில் தள்ளல் போன்ற நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன. இவற்றிற்குத் துணையாக அமைந்த கோதண்டத்தை எவ்வரு வெம்சிலை என்று போற்றுகின்றார். அதனை, “வேறொருவரால் அடக்கியாள வொண்ணாமல் காணவே ப்ரதிபட்சம் முடியும் படியான 10. மேலது 10:3 11. பெரு. திரு. 10:1 12. பெரு, திரு. 10:2