பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பூர் சார்ங்கம்” என்று வியாக்கியானமும் போற்றுகின்றது. இராமன் தன்னை இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே என்று தனது அவாவையும் வெளியிடுகின்றார். இராமபிரானுக்கு அடியவனான பரதாழ்வானுக்கு அடிமை பூண்டொழுகின சத்துருக்கனன் போலப் பாகவததாசனாக வேண்டுமென்பது ஆழ்வாரின் பேரவா. பின்னர், சனகன் கன்யாசுல்கமாக வைத்திருந்த வில்லையிறுத்து மைதிலியை மணத்தல், அயோத்திக்குத் திரும்பும்போது எதிர்வந்து தோன்றின தான் அவதரித்த கூடித்திரிய சாதியினரின் பகையாக இருந்த பரசுராமனைப் பங்கப்படுத்தல் போன்ற செயல்கள் இவர் மனத்திரையில் தோன்றுகின்றன." பின்னர் அடுத்து, கைகேயியின் சொற்படி வழிவழியாக வரும் அரசபாரத்தைக் கைவிட்ட நிகழ்ச்சி, குகப்பெருமான் நாவாய் செலுத்தி உதவின செய்தி, பரதாழ்வானுக்கு மரவடியையும் அரச பாரத்தையும் நல்குதல் ஆகியவற்றில் ஆழங்கால்பட்டு மகிழ்கின்றார். இராமபிரானும் சீதாப்பிராட்டியும் சித்திரகூட மலையில் உலவி வீற்றிருக்கும் காட்சி ஆழ்வாரின் நினைவிற்கு வருகின்றது. இக்காட்சியை பிற்பட்டார் கேட்டு அநுபவிக்க முடியுமேயன்றித் தாம் கண்டு அநுபவிக்கப் பெறாமல் கண்விடாய்த்து நிற்கும் குறைதீர எக்காலத்திலும் உள்ளார் அநுபவிப்பதற்காகவே தில்லைச் சித்திரகூடத்தில் வீற்றிருக்கின்றனன் என்று நினைந்து உள்ளம் நெகிழ்கின்றார். இக்காட்சியை நேரில் கண்குளிர சேவிக்கப் பெறுபவர்கட்கு நித்திய சூரிகளும் சிறிதும் சமமாகார் என்று கருதுகின்றது இவரது பக்தித் திருவுள்ளம்." இங்ங்னம் எண்ணிய நிலையில் விராதனை விண்ணுக்கேற்றல், அகத்தியரிடமிருந்து கொடுத்து வைத்திருந்த வில்லை பரசுராமனிடம் பெற்ற இராமபிரான் வாங்குதல், சூர்ப்பணகையின் மூக்கையறுத்தல், கரதுடனர் உயிர் வாங்குதல், மாய மானாய் வந்த மாரீசனை அழித்தல் போன்ற செய்திகளும் தொடர்ந்து வைதேகியைப் பிரிந்ததால் இராமபிரானுக்கு ஏற்பட்ட வருத்தத்தால் தளர்வெய்துதல், சடாயுவுக்கு வீடுபேறு அளித்தல், சுக்கிரீவனுடன் நட்புக் கொள்ளல், வாலியை வானுலகிற்கு அனுப்புதல், மாருதியால் இலங்கையைச் சுடுவித்தல் போன்ற நிகழ்ச்சிகளும்" இவற்றை அடுத்து, குரைகடலை அடலம்பால் மறுக எய்தல், சேது அமைத்து இலங்கையை அடைதல், இராக்கதர்களையும் அவர்களுடைய அரசன் இராவணனையும் கொன்றழித்து வீடணனுக்கு ஆட்சியை ஈதல் போன்ற நிகழ்ச்சிகளும்" 13. பெரு. திரு. 10:3 16. மேலது 10:6 14. பெரு. திரு. 10:4 17. மேலது 10:7 15. மேலது 10:5