பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கூடத்துச் செங்கண்மால் 7 பின்னர் அயோத்திக்கு மீண்டு வந்து ஆட்சியை அடைதல், இராவணனின் தொல் கதையை அகத்தியன் வாயால் கேட்டல், மைதிலி பெற்றெடுத்த தன் மைந்தர்களான குசலவர்களின் செம்பவளத் திரள்வாயால் தன் வரலாற்றைக் கேட்டல் போன்ற நிகழ்ச்சிகளும் சம்புக வதம், அந்தண குமாரனுடைய உயிர்மீட்டல், அகத்தியன் அளித்த மணிமாலையை அணிதல், சத்துருக்கனைக் கொண்டு இலவணாகரனைக் கொல்வித்தல, துருவாசரின் சாபத்தால் இளைய பெருமாளைத் துறத்தல் போன்ற நிகழ்ச்சிகளும்" தான் சோதிக்கு எழுந்தருள்கின்ற நாளில் முன்னதாக அயோத்தி மக்களையும், பிற உயிர்களையும் வைகுந்தத்திற்குப் போகச் செய்தல், கருடாழ்வான் தாங்க, நித்திய சூரிகளும் முக்தர்களும் எதிர்கொள்ள, ஆதி இடமான பரமபதத்திற்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகளும்’ ஒன்றன்பின் ஒன்றாக திரைப்படத்தில் வெள்ளித் திரையில் காண்பதுபோல் ஆழ்வாரின் மனத்திரையில் காணப்பெறுகின்றன. தில்லைத் திருச்சித்ர கூடத்தில் எழுந்தருளியிருக்கும் கோவிந்தராசர் அவ்விராமபிரானே என்று கருதி துதித்துய்யுமாறு அறிவுறுத்துகின்றார். இப்பெருமானைத் தலைவணங்கி அஞ்சலி செய்து சேவிக்கப் பெற்றோர் நடமாடுவதால் இந்நிலம் பெரும்பேறு பெற்றது என்றும், இப்பெருமானின் திருவடிகளைத் தலைமேற் கொள்ளலாகிய அரசினைப் பெற விரும்புவதன்றி அதற்கு மாறாக சுவாதந்திரியம் பாராட்டுகின்ற அரசினை ஒரு பொருளாகத் தாம் மதிக்கவில்லை என்றும் எக்களிப்புடன் பேசுகின்றார் தம் பாசுரங்களில், இராமகாதை முழுவதும் சுருக்கமாக நமக்குக் காட்டப் பெறுகின்றது இத்திருப்பாசுரங்களில், நடு நாட்டுத் திருப்பதிகளான திருக்கோவலூரையும் திருவயிந்திபுரத்தையும் மங்களாசாசனம் செய்தருளின பின்னர், சோழ நாட்டுத் திருப்பதிகளை மங்களா சாசனம் செய்யத் திருவுள்ளம் பற்றின திருமங்கையாழ்வார் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் முதன்முதலாக இழிகின்றார். இத்திருப்பதியின் எழிலார்ந்த சூழ்நிலை இவர் மனத்தைக் கவ்வுகின்றது. "சேமங்கொள் பைம்பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம்' என்றும், தெய்வப் புனல் சூழ்ந்தழகாய தில்லைத் திருசித்ர கூடம்” என்றும் வருணிக்கின்றார். ஊரைச் சூழ்ந்த சோலைகளில் மயில் கூட்டங்கள் 18. மேலது 10:8 21. பெரி. திரு. 3-25 19. பெரு.திரு. 10:9 22. மேலது 3-2:7 20. மேலது 10:10 23. மேலது 3-31