பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஆடுகின்றன; அவை சோலைகளே ஆடுவது போல் காட்சி அளிக்கின்றன. தீர்த்தங்கள் மதுவோடு கூடிப் பெருகுவதால் மதுவின் நசையால் வண்டுகள் திரளாக மொய்க்கின்றன. அருகில் வெள்ளாறு (நிவா என்று குறிப்பிடுவர் ஆழ்வார்) தில்லையை வலங்கொண்டு வருகின்றது. இந்த ஆறு யானைக் கொம்புகளையும், சந்தன மரங்களையும் தள்ளிக் கொண்டு பெருக்கெடுத்து வருங்கால் முத்துகளைக் கொழித்துக் கொண்டு வந்து கழனிகளில் தள்ளும்; அந்த முத்துகள் விதை விதைத்தது போல் காட்சி அளிக்கும். அவற்றைக் கயல்கள் கண்டு இவை என்னவோ; என்று வெருவித் தாவித் திரியும் ஊரோ செம்பொன் மணிமாடங்கள் நிறைந்திருப்பது. நான்மறையாளர்கள் நாடோறும் தீ வளர்த்து வைதிக கருமங்களைத் தவறாது செய்து வரும் ஊர். இத்திருத்தலத்தில் மூலவர் திருப்பாற்கடல் நாதன்போல் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவர் திருநாமம் கோவிந்தராசர். தாயார் கமலவல்லி. விமானம் சாத்விக விமானம். வீடுபேற்றை அவாவும் முமுட்சுகள் ஊண் உண்ணாது நீரையும் காற்றையுமே உட்கொண்டு உயிர்காத்துப் புலன்களை ஒடுக்கித் தவம் புரிகின்றனர். சிலர் இளங்காய்களையும் நெடுநாள் உலர்ந்த பழங்களையும் வீசுகின்ற வெப்பமான காற்றையும் உட்கொண்டு ஐந்து தீயூடு நின்று தவம் செய்கின்றனர். இவர்களைக் கண்டு கழிவிரக்கம் கொண்ட திருமங்கை ஆழ்வார் தில்லைத் திருச்சித்திரகூடம் சென்று சேருமாறு ஆற்றுப்படுத்துகின்றார். இத்திருத்தலம் சென்று சேர்ந்தால் பரமபுருஷார்த்தம் எளிதாகக் கிடைக்கக் கடவதாயிருக்க. அரிய வழிகளை மேற்கொள்வது ஏன்? என்று வினவுகின்றார், ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும்போது பல விபவாவதாரப் பெருமான்களையும் அநுசந்திக்கின்றார். அவர்களுடைய வீரச் செயல்களிலும் விசித்திரச் செயல்களிலும் ஆழங்கால்படுகின்றார். ஒரு காலத்தில் இந்த வையம் பரந்த கடல் வெள்ளத்தில் மூழ்கிப்போக அப்பொழுது மிக்க சினங்கொண்ட வராகத்திருவுருவாகி அதைத் தம் கோட்டால் தூக்கிக் கொணர்ந்தவன் அழகிய வாமன உருவங்கொண்டு மாவலியின் வேள்வி நிலத்திற்குச் சென்று மூவடி மண் இரந்து பெற்றவன்'. இருபத்தொரு தலைமுறை கூடித்திரியர்களைக் கொன்றழித்த பெருமான். வருணனின் உதாசீனத்தால்அணைகட்ட வராதது கண்டு 24. பெரி. திரு. 3-27, 8 27. மேலது 3-2:4 25. மேலது 21 28. மேலது 3-2:5 26. பெரி. திரு. 3-2:3