பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கூடத்துச் செங்கண்மால் 9 அவன் மீது சினங்கொண்டு அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றச் செய்வேன் என்று கூறிப் பொங்கி எழுந்து, வருணனைச் சரணடையச் செய்து சேது கட்டியவன்'. இலங்கை நகரை ஒரம்பால் அழித்தவன்". பிரகலாதாழ்வான் பொருட்டு நரசிம்ம உருவத்துடன் தோன்றி அவன் தந்தை இரணியனை அழித்தவன்'. இத்தகைய எம்பெருமான்தான் சித்திர கூடத்திருப்பவன் என்கின்றார் ஆழ்வார். கிருஷ்ணாவதாரத்திலும் அதிகமாக இழிந்து அவ்வதாரத்தில் நிகழ்த்திய பல அற்புதச் செயல்களை நினைந்து போற்றுகின்றார் ஆழ்வார். நப்பின்னைப் பிராட்டிக்கும் பெரிய பிராட்டியார்க்கும் கொழுநன் குதிரை வடிவாக வந்த கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்து கொன்றவன்'. இரட்டை மருத மரங்களிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவன். கோவர்த்தன மலையைக் கொற்றக் குடையாக எடுத்து ஆயர்கட்கும் ஆநிரைக்கும் கல்மாரியால் வந்த துன்பத்தைக் காத்தவன். அழகிய பெண்ணுருவங் கொண்டு வந்து நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயன்ற பூதனையின் உயிர் குடித்தவன். அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி, உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தவன். நப்பின்னையின் பொருட்டு ஏழு கொல்லேறு களைத் தொலைத்து திருவாய்ப்பாடியின் தெருவில் கூத்தாடியவன். குவலயாபீடம் என்னும் களிற்றின் கொம்புகளிரண்டையும் சேற்றிலிருந்து முள்ளங்கியைப் பிடுங்குவது போல் பிடுங்கி அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அக்களிற்றினையும் அதன் பாகனையும் உயிர் தொலைத்தவன்.” இத்தகைய எம்பெருமான் பின்னானார் வணங்கும் சோதியாக கோவிந்தராசனாக திருத் தில்லையில் கோயில் கொண்டுள்ளவனாக ஆழ்வார் அநுசந்தித்து அநுபவிக்கின்றார். இவரை நாம் இன்று வணங்கி வாயாரா வாழ்த்துகின்றோம். ஆழ்வார் தம் பாசுரங்களில் 'வருகின்றான், வருவான் என்று அருளிச் செய்திருப்பதால், அவர் இத்திருப்பதிக்கெழுந்தருளின சமயம் பெருமாளுக்குத் திருவிதிப் புறப்பாடாக இருந்திருக்காலா மென்று சிலர் கருதுவர். இதனை நிலைநிறுத்த, “கருமுகில் போல்வதோர் மேனி கையன ஆழியும் சங்கும் பெருவிறல் வானர் சூழ ஏழுல கும்தொழு தேத்த 29. பெரி. திரு. 3-2:6 32. மேலது 3-27, 8 3-31 30. மேலது 3-3:6 33. பெரி. திரு. 3.3:1-7 31. மேலது 3-3:8