பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஒருமக ளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத் துள்ளானே" (கருமுகில் - காளமேகம், விறல் - ஆற்றல்; ஆயர் மடநதை - நப்பின்னை நீளதேவி); நிலமகள் - பூமிப் பிராட்டியார் திருமகள் - பெரிய பிராட்டியார்) என்ற பாசுரத்தைக் காட்டலாம். திருமேனி காளமேகம் போன்றுள்ளது. அதற்குப் பொலிவு தருவனபோல் திருக்கைகளிலுள்ள திருவாழி திருச்சங்குகள் ஒளிர்கின்றன. இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாங்கள் சுற்றிலும் சூழ்ந்து வருகின்றன. மற்றுமுள்ளாரும் தொழுது துதிக்கின்றனர். சீதேவி பூதேவி நீளதாதேவி என்ற நாச்சிமார் மூவரும் எம்பெருமானும் எழுந்தருளியுள்ளனர். இப்படிப்பட்ட விபவம் பொலியப் புறப்பட்டெழுந்தருளா நின்றனன் எம்பெருமான் என்று கண்ணாரக் கண்டு வாயாரப் பேசுகின்றார் ஆழ்வார். இந்த நிலையில் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது. இது பாசுரம். அடியால் உலகெல்லாம் அன்றளந்து கொண்ட நெடியானைக் கூடுதியே நெஞ்சே - கொடிதாய குத்திர கூடங்கி கொளுந்தாமுன் கோவிந்தன் சித்திரகூடம் கருதிச் செல்" (நெடியான் - திரிவிக்கிரமன்; சூத்திரம் - இழிகுணம் - கூடு - உடல்; அங்கி - நெருப்பு கொளுந்தாமுன் எரித்து விடுவதற்கு முன்). இறப்பதற்கு முன்னர் சித்திரகூடம் சென்றால் தில்லைக் கோவிந்தனை வழிபட்டு நற்கதி அடையலாம் என்று தம் நெஞ்சிற்கு அறிவூட்டுகின்றார் இப்பாடலில். கோவிந்தன் என்ற திருநாமம் பசுக்களைக் காத்தவன், உயிர்களை அடிமையாக உடையவன், கதிரவனின் கதிர்களில் தங்கியிருப்பவன், நான்மறையை நான்முகனுக்கு உபதேசித்தவன், வராக அவதாரம் செய்து பூமியை அடைந்தவன் என்ற பொருள்களையெல்லாம் தாங்கி நிற்கின்றது என்பதை நாம் சிந்திக்கின்றோம். மணிவாசகப் பெருமானும் கோவிந்தராசரின் சயனத் திருக்கோலத்தைக் குறிப்பிட்டுள்ளமையும் நம் நினைவிற்கு வருகின்றது." இந்நிலையில் ஆழ்வார்களின் பாசுரங்களை அவன் சந்நிதியில் ஓதி உளங் கரைகின்றோம். அவர்கள் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முனைகின்றோம். பின்னர் தீர்த்தம் திருத்துழாய் சடகோபம் 34. மேலது 3.3:7 36. திருக்கோவை - 86 35. நூற். திரு. அந் 22