பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கூடத்துச் செங்கண்மால் 11 சாதிக்கப்பெற்று திருக்கோயிலின் ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து இத்திருக்கோயிலைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சிந்திக்கின்றோம். கோவிந்தராசர் அறிதுயில் கொண்டுள்ள திருக்கோயிலை, எட்டாம் நூற்றாண்டில் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலை நிறுவிய இரண்டாம் நந்திவர்மப் பல்லவ மல்லன் (கி.பி. 17.782) எடுப்பித்தான். 12ஆம் நூற்றாண்டில் அநபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கள் (கி.பி. 1133-1150) சிற்றம்பலத்தைப் பெருக்கி அமைத்தற் பொருட்டு கோவிந்தராசப் பெருமானை எடுத்துக் கடலில் எறிந்துவிட்டான் என்றும், இராமாநுசர் இந்தத் திருமேனியைக் கைப்பற்றித் திருப்பதியில் பிரார்த்தித்தார் என்றும் கூறுவதற்குச் சான்றுகள் பல உள்ளன. கிருட்டிண தேவராயர் தம்பி அச்சுதராயரது ஆட்சியில் கி.பி. 1539 இல் மீண்டும் இவர் இவருடைய பழமைத்தானத்தில் பிரதிட்டிக்கப் பெற்று வைகானச முறைப்படி வைணவ பட்டாச்சார்யர்களால் வழிபாடுகள் செய்துவர நிர்பந்தங்கள் விடப்பெற்றுள்ளன என்ற செய்தி கல்வெட்டுகளால் அறியக் கிடக்கின்றது. திருச்சித்திர கூடத்தின் பல பகுதிகளைக் கட்டிய செய்திகள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவை. இராயவேலூரிலிருந்து அரசோச்சிய விசயநகர வமிச சீரங்கராயர் இக்கோயிலை முகமண்டபத்துடன் புதிதாகவே வனைந்து, வழிபாடு செய்யும் வைணவர்கட்கு ஐந்து சிற்றுர்களை இறையிலியாக அளித்தார். செட்டி நாட்டரசர் வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் இத்திருக்கோயிலின் முன்னணியாகவுள்ள நாற்பதுகால் மண்டபத்தை அமைத்தார். இப்போதுள்ள திருச்சித்திரகூடத்தின் அமைப்பு 1934இல் செட்டி நாட்டரசரின் திருமகனார் முத்தய்யா செட்டியார் தமது நேர்பார்வையில் சுமார் மூன்றரை இலட்சம் ரூபாய் செலவில் அழகுற அமைத்ததாகும். வேறு சில செய்திகளும் அறியத்தக்கவை. ஒரு சமயம் சைவர்கட்கும் வைணவர்கட்கும் இங்கு நடந்த விவாதங்களைச் செஞ்சியில் அரசுரிமை தாங்கிய கிருட்டிணப்ப நாயக்கர் தீர்த்து வைத்தார் என்றும், ஆங்கில ஆட்சியில் பல விவாதங்கள் நீதித் தலங்களில் விவாதிக்கப் பெற்றன என்றும் இறுதியாக. செட்டி நாட்டரசர் வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் விவாதங்களை முழுதும் சமரசப்படுத்தினார் என்றும் நினைவு கூர்கின்றோம். எம்பெருமானைக் கண்டுகளித்த பக்திப் பெருக்குடனும் சில அரிய வரலாற்றுச் செய்திகளுடனும் திருக்கோயிலை விட்டு வெளிவருகின்றோம்.