பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. காழிச் சீராமவிண்ணகரத்
தாடாளன்

இவ்வுலகில் நாம் வாழும் நாட்களில் பகவதநுபவம் பெறுதலில் பலகை உண்டு. அவற்றுள் ஒன்று ஈசுவரன் உகந்து கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசங்களில் பேரவாக்கொண்டு ஆங்காங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்களின் அநந்த கல்யாண குணங்களை அநுபவித்துக் கொண்டு எண்ணம், சொல், செயல்களினால் கைங்கரியம் செய்தலையே பொழுது போக்காகக் கொள்ளுதல் ஆகும். ஆழ்வார் பெருமக்களுள் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு அதிகமான திவ்விய தேசங்களைச் சேவித்தவர் திருமங்கையாழ்வார். இவர் அந்தந்த எம்பெருமான்களைச் சேவிக்கும் முறை மிகமிக நேர்த்தியானது. எம்பெருமான்களைச் சேவிக்கும் பாசுரங்கள் கம்பீரமான தமிழ் நடையில் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். பாடியும் அநுபவிக்கலாம்.

<poem>"தான் உகந்த ஊரெல்லாம்

தன்தாள் பாடிப்

... ... ... ... ... ... பூங்கோல் ஊர்தொழுதும்

போது நெஞ்சே

என்பது அவர் வாக்கு. நெஞ்சை ஆற்றுப்படுத்தும் பாசுரம் இது. “என் நெஞ்சமே, எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளுக்கெல்லாம் போந்து, அவனுடைய திருவடிகளைப் பாடி, வளப்பம் பொருந்திய திருக்கோவலூரைச் சேவிப்போம் வருவாயாக’ என்கின்றார் இதில். இதே பாணியில் இன்னொரு பாசுரத்தில்,

1. திருநெடுந் , 6