பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிச் சீராமவிண்ணகரத் தாடாளன் 13 “உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால மற்றையார்க் குய்ய லாமே?” (ஏத்தும் - புகழும்) என்று குறிப்பிடுவதும் சிந்திக்கத் தக்கது. இவற்றுள் கண்டியூர், திருவரங்கம் திருப்பேர்நகர் சோழ நாட்டுத் திருப்பதிகள். காஞ்சிபுரம், மாமல்லபுரம், தொண்டை நாட்டுத் திருப்பதிகள். திருமெய்யம் என்னும் திருப்பதி பாண்டி நாட்டைச் சேர்ந்தது. இந்தத் திருப்பதிகளைப் பற்றிப் போற்றிக்கொண்டு அவற்றை அடைந்தவர் எவரோ அவர் உய்வை அடைவரே அல்லாமல், அங்ங்னம் செய்யாத மற்றோர் உய்ய வழி இல்லை என்பது இவ்வாழ்வாரின் திருவுள்ளம். ஏனைய திருப்பதிகளையும் இவற்றுடன் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். திருச்சித்திர கூடத்தைப்பற்றிப் பேசும்போது “தில்லைத் திருச்சித்திர கூடம் சேர்மின்களே' என்கின்றார். காழிச் சீராமவிண்ணகரம் பற்றிப் பேசும்போது “காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே" என்கின்றார். திருநறையூரைப் பற்றிப் பேசும்போது “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே' என்கின்றார். இப்படிப் பல திருப்பதிகளையும் எடுத்துரைத்து சென்று சேருங்கள் - சென்று சேருங்கள் என்றால், எந்தத் திருப்பதியில் சென்று சேர்வது என்று வைணவ அடியார் ஒருவரை மற்றோர் அடியார் கேட்க அதற்கு அவர் 'ஆழ்வார் திருவாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகள் எல்லாம் நாம் நுழைந்து புறப்பட வேண்டியது பிராப்தம் என்று அவர் மறுமொழி பகர்ந்தது வைணவ சமூகம் நன்கு அறியும். இந்த ஆழ்வாரே பதியே பரவித் தொழும் தொண்டர்’ என்று குறிப்பிடுவதால் எம்பெருமான் உகந்தருளின நிலங்களெல்லா வற்றிலும் சென்று சென்று சேவிக்க வேண்டும் என்பது உட்கருத்து. இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் நாம் மயிலாடுதுறை காளியாக்குடி அய்யர் விடுதியிலிருந்து' சீகாழிக்குப் புறப்படுகின்றோம். பேருந்தின் மூலம் (நாம் தங்கினது 2. திருக்குறுந் - 19 5. திருவாய் 6.6. 3. பெரி. திரு. 3.4 6. பெரி. திரு. 7.17 4. மேலது 3.4 7. மயிலாடுதுறையில் நம் போன்ற திருத்தலப் பயணிகள் தங்குவதற்கு நலல விடுதி. பழைய முறையிலிருப்பினும் எல்லா வசதிகளும் உள்ளன.