பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி மே திங்கள் 1969) பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவு நடந்தே செல்லலாம். இருப்பூர்தியில் வருவோர் சீகாழி நிலையத்திலிருந்து இறங்கி வரலாம். நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது திருக்கோயில். ஆழ்வார் திருத்தலப் பயணமாகப் பரிவாரங்களுடன் இத்திருப்பதிக்கு எழுந்தருளுங் கால் பரிவாரங்களுடன் வந்த சிலர் “நாலு கவிப் பெருமாள் வந்தார்” “பரகாலன் மத்தகஜம் வந்தார்” என்ற குரல் ஒலிகளை எழுப்பி ஆழ்வாரின் பெருமையை எடுத்தேத்திக் கொண்டு சென்றதாகவும், இவ்வூரிலிருந்த சில சைவ அடியார்கள் இக்கூட்டத்தின் முன் வந்து எங்கள் ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இருக்கும் இடத்தில் இங்ங்னம் விருதுதிச் செல்லலாகாது” என்று சொல்லித் தடுத்ததாகவும், அது கேட்டு ஆழ்வார் சம்பந்தப் பெருமான் உள்ளவிடத்திற்குச் சென்று அவருடன் வாதப்போர் செய்யத் தொடங்கினதாகவும், அப்போது நாயனார் ஆழ்வாரை நோக்கி “உம் கவித்திறத்தை யாம் காணுமாறு முந்துற முன்னம் ஒரு பாடல் பாடும்” என்று சொன்னதாகவும், உடனே ஆழ்வார் சீராமவிண்ணகர் எம்பெருமான் மீது “ஒரு குறளாயிரு நில மூவடி மண் வேண்டி” என்று தொடங்கி ஒரு திருமொழியைப் பாடியதாகவும், அதனைக் கேட்ட சம்பந்தப் பெருமான் மிகவும் வியந்து"உமக்கு இவ்விருதுகள் யாவும் தகும், தகும்” என்று சொல்லித் தமது வேலாயுதத்தை இவருக்குத் திருமுன் காணிக்கையாகச் சமர்ப்பித்து நன்கு பாராட்டி உபசரித்து வழிபட்டு வழிவிட்டு மீண்டதாகவும் பெரியோர் கூறும் இதிகாசம் ஈண்டு நினைவுகூரத்தக்கது." திருக்கோயிலில் நுழையும்போதே இத்திருப்பதி எம்பெருமானின்மீது ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திருமொழிப் பாசுரங்களைச் சிந்திக்கின்றோம். இத்திருப்பாசுரங்களின் பிற்பகுதி இத்திவ்விய தேசத்தைப் பற்றியயையும் முற்பகுதி இங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. இனி, இத்திவ்விய தேசத்தின் வருணனையில் ஆழங்கால்படுவோம். சுற்றியுள்ள வயல்களில் சூல் கொண்டுள்ள சங்குகள் கருவுயிர்க்கும் நிலையிலுள்ளன. அங்கு உழுகின்ற எருதுகள் அங்கும் இங்கும் ஒடுகின்றன. இந்த அதிர்ச்சியினால் சங்குகள் முத்துக்களை ஈனுகின்றன. வெள்ளை வெளேரென்றிருக் 8. நாலு கவிப் பெருமாள் - ஆசு கவி, மதுரகவி, சித்திர கவி, விஸ்தாரகவி என்ற நாலு வகையான கவித்திறங்களில் மிக்க வல்லமை பெற்றவர் என்றபடி, 9. பெரி. திரு. 3.4 10. இதன் வரலாறு பற்றிய இரு பாடல்கள் தனிப் படல் திரட்டில் உள்ளன.