பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இத்திருவாய்மொழியை ஒத வல்லவர்கள் கடல் சூழ்ந்த உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேம்பட்டவராவார் என்கின்றார் ஆழ்வார். இப்பாசுரத்தில் திருமங்கையாழ்வாரின் விருதுகளாகிய அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், பரகாலன், கலியன் போன்ற யாவும் ஒருசேர ஓரிடத்தில் கூறப் பெற்றுள்ளன. இவற்றின் பொருளைச் சிந்தித்து மகிழ்கின்றோம். இந்நிலையில் திவ்வியகவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. “செல்லுந்தொறும் உயிர்ப்பின் செல்லும் உயிர்வினையை வெல்லும் உபாயம் விரும்புவீர் - தொல்லரங்கர் சீராம விண்ணகரம் சேர்மின்பின் மீளாத ஊராம விண்ணகரம் உண்டு” - (செல்லும் தொறும் - உயிர் உடலை விட்டு நீங்கும் இடமெல்லாம்; இருவினை - நல்வினை, தீவினை; வெல்லும் - கடத்தற்குத் தக்க உபாயம் - வழி; மீளாத - திரும்பி வருதல் இல்லாத விண்ணகரம் - பரமபதம்) சீராம விண்ணகரத்தைச் சேர்ந்தால் இருவினைகளையும் ஒழித்துப் பரமபதத்தில் நிலைத்து வாழலாம் என்கிறார் அய்யங்கார். சக்கரவர்த்தி திருமகன் எழுந்தருளியிருக்கும் சிறந்த நகரமாதலின் இது சீராம விண்ணகரம் என்ற திருநாமம் பெற்றது. காளி வாழும் தலம் ஆதல்பற்றி இத்திருத்தலம் காழி(ளி)ச் சீராமவிண்ணகரம் என்ற பெயரையும் கொண்டது. இன்று இத்திருத்தலத்தைச் சீகாழி, சிய்யாழி என்று மக்கள் வழங்குகின்றனர். இங்ங்னம் பல செய்திகளை அறிந்து இறையநுபவம் பெற்ற நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 13. நூற். திரு.ப அந், 24