பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இந்தளூர் அந்தணன் எம்பெருமானிடம் செளலப்பியம் என்ற திருக்குணம் நிறைந்திருப்பது அச்சாவதாரம். பரமபுருடனாகிய தன்னை மலர்கள் முதலிய பொருள்களைக் கொண்டு வழிபட்டு வாழ வேண்டும் என்று கருதும் சேதநனுக்குக் கண்ணன் கீதையில் கூறுவது சேதநன் தன் கையில் கிடைத்ததொன்றைத் திருமேனியாக எழுந்தருளப் பண்ணி “எம்பெருமானே, இங்கு தேவரீர் எழுந்தருளி இருக்க வேண்டும்” என்று வேண்டும்போது, இறைவனும் அதற்கு இணங்கித்தான் தான் பரத்துவ நிலையில் செய்யும் விருப்பத்தை அத்திருமேனியில் செய்து இவனுக்குத் திருவருள் புரிவான். இந்த அர்ச்சாவதாரம் தொலைவினால் மனத்திற்கும் எட்டாத பரமபதம் திருப்பாற்கடல் போன்றும், தற்போது சேர்ந்து இன்பந் துய்த்தற்கியலாத இராமகிருஷ்ண அவதாரங்கள் போன்றும் அல்லாமல் எப்பொழுதும் நம்மருகில் நிலைபெற்று கண்ணாற் கண்டு களிப்பதற்கு இடந்தருகின்றது. அர்ச்சையில் எம்பெருமான் சங்கொடு சக்கரம் ஏந்துத் தடக்கையனாயிருத்தலை நாம் காண்கின்றோம். "திருக்கையிலே பிடித்த திவ்வியாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆசன பதுமத்திலே யழுந்தின திருவடிகளுமாய் நிற்கின்ற நிலையே நமக்குத் தஞ்சம்' என்று இந்நிலையை முமுட்கப்படி குறிப்பிடுகின்றது. இங்ங்னம் ஆயுதங்களை எப்போதும் தாங்கிக் கொண்டிருத்தல் வன்மை வாய்ந்த வீரனுடைய காரியமாகும். தன்னை வந்தடைந்த 1. முமுட்கப்படி - 142.