பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 21 இத்திருமொழியில் பாசுரங்களின் அநுபவம் பேரின்பம் பயப்பதாக உள்ளது. இந்தப் பாசுரங்களை நாவினாற் சொன்னாலும் பிறர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சு நீர்ப் பண்டமாயுருகும். திருவிந்தளூர் எந்தையைக் கண்ணாரக் காணவேண்டும் என்றும், கையாரத் தொழ வேண்டும் என்றும் ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி, வழுவிலா அடிமைகள் செய்ய வேண்டும்’ என்றும் எவ்வளவோ பாரித்துக்கொண்டு வந்தார் ஆழ்வார். ஆனால், அப்பெருமான் திருக்கண்களால் குளிர நோக்குதல், வாரியணைத்தல், வினவுதல், அத்தாணிச் சேவுகத்தில் ஏவுதல் ஆகியவற்றில் ஒன்றும் செய்திலன்; நிரங்குசச் சுவாதந்தரனான (தடையில்லாத சுவாந்தரனான) அவனது திருவுள்ளத்தை யார்தான் அறியவல்லார்? ஆழ்வாருடைய கல்நெஞ்சத்தையும் உருக்க வல்ல பாசுரங்களைச் செவிமடுக்க வேண்டுமென்று பிச்சேறினான் போலும். கோபுரவாசற் கதவையும் அடைத்துக்கொண்டு கிடந்தான் போலும். ஆழ்வார் துடிக்கின்ற துடிப்பை எப்படிக் காட்டுவது? பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஒதி உளங் கரைகின்றவர்களே இத்துடிப்பை ஓரளவு அறிய முடியும். பிரேமத்தால் பெண் பேச்சாக அமையப் பாசுரமிட்டுக் காட்டுகின்ற துடிப்பை ஆழ்வார் தானான தன்மையில் காட்டுகின்ற திருமொழியாகும் இது. நம்மாழ்வார் 'மின்னிடை மடவார்கள் என்ற திருவாய்மொழியில் தலைவன் காலந்தாழ்ந்து வரக்கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைக்கும் பாங்கிலும், குலசேகரப் பெருமாள் “ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதார்" என்னும் திருமொழியில் கன்னியர் ஊடிக் கண்ணனை எள்கும் நிலையிலும் இந்த ஆழ்வாரே “காதில் கடிப்பு இட்டு” என்ற திருமொழியில் ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைக்கும் முறையிலும் பெண் பேச்சாக வெளியிட்ட நெஞ்சுருக்கும் உணர்ச்சிகளையெல்லாம் இத்திருமொழியில் தானான தன்மையில் அருளிச் செய்த அழகு மிக அற்புதமாக அமைந்துள்ளது. இந்த ஆழ்வாரின் அநுபவத்தை நாமும் பெற முயல்கின்றோம். கோபுர வாயிலிலிருந்தே இந்த அநுபவத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றோம். ஆழ்வார் வேண்டுவது : “இந்தளூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, அடியேன் உம்மை வணங்கினேன்; நீர் சேஷி என்றும் அடியேன் சேஷபூதன் என்றும், அடிமை செய்தலே முறையென்றும் நன்கு அறிந்தே கைங்கரியத்தை நாடுகின்றேன். உம்மைப் பார்ப்பதே 2. திருவாய். 3.31 4. பெரு. திரு. 5 3. மேலது 6.2 5. பெரி. திரு. 10:8