பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கடினமாக உள்ளது. உம்முடைய திவ்விய மங்கள விக்கிரகத்தை ஒரு தடவையாவது அடியேன் பார்க்கலாகாதா? (1). நெஞ்சில் நீங்காதிருக்கும் செல்வமே, கட்புலனுக்குச் சிறிது காலமாவது இலக்காகக் கூடாதா? கண்ணாலே கண்டுகளிக்கப்பெறும் அநுபவத்தை நீர் வஞ்சித்தீராகிலும் மனத்தால் அநுபவிக்க அநுபவிக்க இனிதாயிருக்கிறதே. அந்தண் ஆலிமாலே சோலை மழனிறே! நறையூர் நின்ற நம்பீ! என்று வேறு திருத்தல எம்பெருமான்களையும் இந்தத் திருத்தல எம்பெருமானாகக் கண்டு ‘அடியேற்கு இறையும் இரங்காயே என்று கெஞ்சும் பாவனையில் பேசுகின்றார் ஆழ்வார் (2). நான் சேவித்தாலும் சேவிக்கின்றேன்; இழந்தாலும் இழக்கின்றேன்; அடியேனுக்கு இஃது ஒரு பெரிய பொருளன்று. நீர் குணசாலி என்று பேர் படைப்பதற்குப் படாதபாடுகள் பட்டுள்ளீர். மாவலியிடம் முன்னம் குறளுருவாய் முவடி மண் இரந்து பெற்று, பின்னர் திரிவிக்கிரமனாகி மூவுலகங்களையும் அளந்து பெரும்பாடுகள்பட்டுப் பெரிய குணம் சம்பாதித்தீர். ‘நான் உலகுக்கெல்லாம் சேவி, எல்லாரையும் நான் குளிர நோக்கக் கடவேன்' என்று உறுதியாகத் தனி மாலை இட்டிருக்கும் நீர் என்னை நோக்கா தொழியலாமா? "அயலாரும் ஆசையெங்ங்னும் கடலில் வீழ்ந்திங்கு அயர்ந்தோம்; அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூ ரிரே!” என்கின்றார். திருமங்கை மன்னன் திருவிந்தளூர்ப் பெருமானைக் காண ஆசைப்பட்டு அது பெறாதே முடிந்தான் என்ற பேச்சு நாற்சந்தியில் கிளம்பினால் இதனைக் காட்டிலும் மிக்கக் குற்றம் வேறு உண்டோ? ஒருவர் ஆசைப்பட்ட அழகையும் குற்றமுள்ள ஒருவர் அந்த ஆசைக்கு முகம் காட்டின அழகையும் என்ன சொல்லுவோம்! சர்வ ரட்சகன் இப்படியன்றோ இருப்பது! என்று அயலர் ஏசுவார்களே அப்படிப்பட்ட ஏச்சுக்கு இடமாகும்படி நடந்து கொள்ளவேண்டா என்பதே அடியேன் சொல்வது (3). அடுத்து, கல்நெஞ்சையும் உருக்கும் வண்ணம் பேசுகின்றார் ஆழ்வார். 6. பெரி. திரு. 4,9:3