பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 23 "ஆசைவழுவா தேத்தும் எமக்கிங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு காசின்ஒளியில் திகழும் வண்ணம் காட்டிர்! எம்பெருமான்! வாசிவல்லீர் இந்த ரூரீர்! வாழ்ந்தே போம்நீரே” (வழுவாது . குன்றாமல்; ஏத்தும் - துதிக்கும்; இழுக்கு - குற்றம், தேசம் - நாடு; ஆளாய் . தொண்டாய், காசு - பொற்காக, வண்ணம் வடிவழகு; வாசி - வேறுபாடு, தார தம்மியம்.) "அடியேன் உம்மீது ஆசை குன்றாமல் துதிக்கின்றேன். நீர் அடியேனை உதாசீனம் செய்யச்செய்ய அதுவே எருவாக ஆசை மேலும் வளர்கின்றது. இப்படி நான் துதித்தால் சேஷயூதர் சேஷியைத் துதிப்பது முறையன்றோ?' என்று எல்லோரும் கருதவேண்டியது மறை; அங்ங்னம் நினையாமல் என் செயலைப் பரிகசிக்கின்றனரே. கூவிக்கூவி நெஞ்சுருகக் கதறும் கலியனுக்குக் காட்சி அளிக்காமல் இருக்கின்றானே; இவன் சர்வலோக சரண்யனாம்; திருநாமத்தின் அழகுதான் என்னே! என்று என்னைச் சிலர் பரிகசிக்கின்றனர்; மேலும் சிலர், பல்லெலாம் தெரியக் காட்டிப் பலகால் வேண்டினவிடத்திலும் வாய்திறவாது இருக்கும் ஒருவனை நாணம் கெட்டு ஏத்துகின்றானே இக்கலியன்!” என்று ஏளனம் செய்கின்றனர். அநந்யார்ஹராக" இருக்கும் எங்களுக்கு எங்களுக்கென்றே கொண்டிருக்கின்ற திருமேனியை எமக்குக் காட்டாதிருப்பது என்னோ? வாசிவல்லீர். மிகச் சிறந்த நம் திருமேனியை நித்திய சூரிகள் மட்டிலுமே காணவல்லவர்கள், அற்பனான இவன் காணலாகாது’ என்ற நினைப்போ? சர்வசாதாரணமான திருமேனியை “இன்னார்க்குத்தான் காட்டலாம். இன்னார்க்குக் காட்டலாகாது” என்று வேறுபாடு கொள்ளலாமோ? இந்தளுரீர் நித்திய சூரிகட்குக் காட்சி தரும் வடிவை நித்திய சம்சாரிகட்கும் எல்லாப் பொருள்களையும் அளிப்பதற்கன்றோ இந்தளூரில் வந்து நிற்பது? வாசியற முகம் கொடுக்க வந்து நிற்கிறவிடத்தில் வாசி (வேறுபாடு) வைக்கின்றீரே, வாழ்ந்தே போம் நீரே, உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக ஏற்பட்டது என்று நினைத்திருந்தோம்; அப்படியன்றாகில் உம்முடைய உடம்பை நீரே கண்டு கொண்டு, நீரே தொட்டுக் கொண்டு, நீரே முகர்ந்துகொண்டு, நீரே 7. பெரி. திரு. 4.5:4 8. அநந்யார்ஹர் - பிறர்க்குரியரல்லாதவர் நினக்கே உரியவர் என்றபடி)