பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்து போம் என்று வெறுப்புடன் பேசுகின்றார் (4). இவ்விடத்தில் “சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது' என்ற நம்மாழ்வார் வாக்கு நினைக்கத் தகும். அசித்தும் எம்பெருமானின் திருமேனி என்ற துணிவுடைய இந்த ஆழ்வார் வீணாக வருந்துகின்றார் என்று இந்தளூர்ப் பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகக்கொண்டு ஆழ்வார் பேசுகின்றார் : "தீ எம்பெருமான், நீர் எம்பெருமான், திசையும் இருநிலனும் எம்பெருமான்” என்ற சாத்திரப் பொருள் அடியேனுக்குத் தெரியாமலில்லை. சங்கு சக்கரமும் புன்முறுவல் கொண்ட முகமும் திகழும் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் கண்டுகளிக்கப் பேரவா கொண்டிருக்கும் அடியேனுக்கு ஜகத்சொருபனாக இருக்கும் இருப்பு என்ன பயன் அளிக்கும்? அடியேன் போன்றோர் கண்டுகளிக்க அன்றோ இந்தளுரில் வந்திருப்பது? நீர் பர வாசுதேவனாயிருக்கும் இருப்பு நித்திய சூரிகளின் அநுபவத்திற்காக. வியூகநிலை நான்முகன் முதலானோருடைய கூக்குரலை கேட்பதற்காக. விபவாவதாரங்கள் அக்காலத்தில் இருந்தவர்கட்காக ஒழிந்தன. அந்த யாமியாக இருக்கும் இருப்பு பிரகலாதாழ்வான் போன்றவர்கட்காக. அச்சாவதார நிலையொன்றே அடியேன் போன்றோருக்குப் பிழைப்பு. சம்சாரிகட்கு முகம் கொடுப்பதற்கன்றோ இது ஏற்பட்டது? குருடர்க்கு ஏற்பட்ட இடத்தில் விழிகண்ணர் புகலாமா? விழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்குப் பயன்படுமோ? (5) என்கின்றார். “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய் சிவனாய் அயனாய்” என்று ஜகத் சொரூபனாயிருக்கும் இருப்பு தனக்கு மனநிறைவு தாராமையையும் அசாதாரணத் திருமேனி சேவையே தமக்கு வேண்டும் என்பதையும் “கூராழிவெண் சங்கேந்திக் கொடியேன்பால் வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” என்ற நம்மாழ்வாரின் விருப்பத்தையும் ஈண்டு நினைவு கூர்வோம். அடுத்து ஆழ்வார் பேசுவது நம் உள்ளத்தைத் தொடுவதாக அமைந்துள்ளது. “சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லல நும்.அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி யிருந்தீர், அடியேனை 9. திருவாய். 3.1:2