பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 25 நல்லார் அறிவீர்; தீயார் அறியீர்; நமக்கிவ்வுலகத்தில் எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூ ரீரே!" (ஒக்க - சமமாக; நமக்கு ஈதே என்னுடைய தன்மை ஒன்றினையே) "ஆழ்வீர் நீ சேஷயூதர்; நான் சேவி. என்னை வற்புறுத்தி காரியங்கொள்வது உம் சொரூபத்திற்குச் சேராது என்பது உமக்குத் தெரிந்ததுதானே. அவன் செய்வன செய்து கொள்ளட்டும் என்றிராமல் மீண்டும் மீண்டும் நிர்ப்பந்திப்பது உமக்குத் தகாது” என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டதாகக் கருதி ஆழ்வார் விண்ணப்பிக்கின்றார். “இந்தளுரீர், அடியேன் விண்ணப்பம் செய்ய நினைத்ததைக் கூசாமல் சொல்லி விடுகிறேன். சேஷபூதன் சேவியை வற்புறுத்தலாகாது என்ற முறையறிந்து அடியேனால் இருக்க முடியவில்லை. எல்லாம் அறிந்த தேவரீருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. உம்மைப் பிரிந்து தரிக்கமாட்டாத அடியேனை உம்முடைய அடியவர்கள் எல்லாரோடும் சமமாக நினைத்திருக்கின்றீர். ஒருகணமும் திருமங்கை மன்னன் உம்மைப் பிரிந்திருக்க முடியாது என்ற உண்மையை மாத்திரம் உம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீர் இந்தளுரில் வந்து நிற்கும் செயலை மறந்தீரே” (6) என்கின்றார். “நீர் எல்லாாவித ஆற்றல்களுடையவராயிருந்தும் அடியேனிடத்து ஒரு கைங்கரியம் கொள்ள ஆற்றலற்றவரானிர். 'இந்த நீசனால் என்ன கைங்கரியம் பண்ண முடியும்? என்று நினைத்து அடியேனைத் தள்ளி வைக்கின்றீர். நிறையொன்றுமில்லாத நீசனேனையும் கைங்கரியங்களுக்கு ஆளாம்படித் திருத்திப் பணி கொள்ள உமக்கு ஆற்றலில்லையே. அடியோடு எமக்கு அறிவே இல்லாதபடி மண்கட்டியாகப் படைத்து வைத்திருந்தாலும் ஒருவாறு ஆறியிருக்கலாம். சேதநன் கோட்டியில் படைத்து வைத்தீர்; சேஷத்துவமே சொரூபம் என்பதையும் உணர்த்தி வைத்தீர்; கைங்கரியம் புரியாவிடில் சேஷத்துவம் நிறைவு பெறாது என்றும் புரிய வைத்தீர். இவ்வளவு அறிவையும் பிறப்பித்து வைத்து அடியேனை ஒன்றுக்கும் உதவாதபடி தள்ளி வைத்தீர். கைங்கரியம் கொள்ளாவிடினும் திருவடியையாவது சேவை சாதிப்பிக்கலாம்; அந்தப் பேறும் பெற்றிலேன் திருவடியையும் காட்டா தொழிந்தீர். பிறர்க்கென்றே ஏற்பட்டிருக்கும் திருவடிகளையும் உமக்காகக் கொண்டுள்ளீர் போலும்”(7) என்கின்றார். - 10. பெரி. திரு. 4-96