பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி “இந்தளூர் எம்பெருமானே, உமக்குப் பல நிறங்கள் உள்ளனவாக சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது. கிருதயுகத்தில் உள்ளவர்கள் சத்துவ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகுக்கும் தன்மையர்களாகையால் அவர்கட்காகப் பால் நிற வண்ணனானிர்; திரேதாயுகத்தில் சிவந்த நிறத்தைக் கொண்டீர்; துவாபரயுகத்தில் பசுமை நிறத்தைக்கொண்டீர் கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரின்மையால் இயற்கையான நீலநிறத்தைக் கொண்டீர். இப்போது அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பில் எந்த நிறங்கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியே வேண்டாவோ? இதோபாராய், இதுவே என் வண்ணம் என்று சொல்லி வடிவைக் காட்டியருளிர்” (8) என்கின்றார். ஏழு தலைமுறையாக வந்து அடிமை செய்யும் குடியிலே பிறந்த அடியேன் விஷயத்தில் இவ்வளவு ஆலோசிக்கின்றீர். இது தகுதியோ? நம்முடைய திருமேனியைச் சேவிப்பதற்கு இவன் தகுந்தவனா? தகாதவனா?” என்று வாசி பார்க்கின்றீரே. இது பொருந்துமோ? திருமேனியைக் கண்ணில் காட்டுவதற்கு இவ்வளவு ஆலோசிக்கின்ற நீர் ஓர் ஆலோசனையும் பண்ணாமல் நெஞ்சகத்தின்பால் முன்னே வந்து குடி கொண்டுவிட்டீரே. அஃது ஏன் செய்தீர், நெஞ்சில் புகுந்ததுபோல் கண்ணிலும் புகவேண்டும். கண்ணில் ஒன்றுக்கு ஆலோசனை பண்ணாதவர் ஒன்றுக்கு மட்டிலும் ஆலோசனை பண்ணுவது ஏனோ? திருமேனியின் நிறத்தைச் சிறிதும் காட்டாமலிருக்கின்றீரே. நித்திய சூரிகட்குக் காட்சி கொடுக்கும் வடிவை இங்குள்ளார்க்கு முழுக்காட்சி கொடுப்பதற்காகவன்றோ இங்கு எழுந்தருளி இருப்பது?'(9) என்று கூறுகின்றார். இங்ங்னம் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நாம் பெற்றுத் திருக்கோயிலில் நுழைகின்றோம். கருவறைக்கு வருகின்றோம். கிழக்கே திருமுக மண்டலங்கொண்டு சயனத் திருக்கோலத்தில் (வீர சயனம்) சேவை சாதிக்கும் பரிமள ரங்கனை நம் தாபமெல்லாம் தீர வணங்குகின்றோம். இந்த எம்பெருமானுக்குச் சுகந்தவன நாதன், அந்திய ரங்கன், மருவினிய மைந்தன் என்ற வேறு திருநாமங்களும் உள்ளன. திருமங்கையாழ்வார் இவருக்கு இந்தளூர் அந்தணன்" என்று திருநாமம் சூட்டுகின்றார். மூலவருக்கு நான்கு புயங்கள் உள்ளன. தாயார், புண்டரீகவல்லி, சந்திர சாப விமோசன வல்லி என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இவரையும் வணங்குகின்றோம். எம்பெருமான் சந்நிதியில் இந்தப் பத்துப் பாசுரங்களையும் மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். 11. பெரிய திருமடல் - கண்ணி. 126