பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 27 “கலியன் ஒலிசெய்த சீராளின் சொல்மாலை கற்றுத் திரிவார் உலகத்தில் ஆரார் அவரே அமரர்க்கு என்றும் அமலர் ஆவாரே.” (சீரார் - சிறந்த கற்று - ஒதி; ஆர்ஆர் - எவரெவரோ, என்றும் - எக்காலத்திலும், அமரர்க்கு - நித்திய சூரிகளுக்கும், அமரர் ஆவார் - கெளரவிக்கத் தக்கவராவார்.) என்ற பலனையும் பெற்றவராகின்றோம். இத்திருமொழியை ஒதுபவர்கள் எவராயினும் நித்திய சூரிகளால் சிறப்பித்துக் கொண்டாடப் பெறுவர் என்பதை அறிந்து பேராநந்தம் பெறுகின்றோம். இந்நிலையில் திவ்வியகவியின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது. "நாடுதும்வா நெஞ்சமே நாராய னன்பதிகள் கூடுதுமும்வா மெய்யடியார் கூட்டங்கள்- சூடுதும்வா வீதியிந்த ளத்திதகலின் வீசுபுகை வாசம்எழும் ஆதியிந்த ரூரான் அடி" (நாராயணன் பதிகள் - திருமாலின் திருப்பதிகள்; நாடுதும் - தரிசிப்போம்; கூடுதும்; போய்ச்சேருவோம்; இந்தளம் - தூபக் கால்கள்; அகில் - அகில் கட்டைகள்) இதனையும் ஒதுகின்றோம். திருமாலின் திருப்பதிகளிற் சென்று அடியார் கூட்டங்களுடன் கூடி எம்பெருமானின் திருவடித் தாமரைகளை முடிக்கு அணியாகச் சூடுமாறு தம் நெஞ்சை அழைக்கின்றனர் திவ்விய கவி. சந்திரனது சாபம் நீங்கப்பெற்றதால் இத்திருத்தலம் இந்தளூர் என்று திருநாமம் பெற்றது. இதற்கு வடமொழியில் சுகந்த வனம் என்ற திருப்பெயரும் வழங்கி வருகின்றது. திருத்தலப் பயணம் பெற்ற அநுபவத்துடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 12. பெரி. திரு. 4-910 13. நூற். திருப். அந் 22