பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபுலியூர் அருமா கடலமுதன் 39 மிகுதலும், உள்தெளிவு இன்மை தன்னுள்ளே இருக்கும் நீர் கலங்காதிருத்தலும், தேக்குதல் அடித்துக்கொண்டு வரும் தேக்கு மரங்களை வீசுதலும் ஆகியவற்றைக் காணலாம். இப்பாடலில் வண்டுகள் வெள்ளத்தில் மொய்ப்பதை எடுத்துக் காட்டியிருப்பதைக் கண்டு மகிழலாம். இன்னும் ஆழ்வார், எறிநீர்ச் செந்தாமரை மலரும் சிறுபுலியூர்' என்று இவ்வூரைக் காட்டுவர். மேலும், "முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவர் - அவர் கண்வாய்முகம் மலரும் செழுநீர்வயல் தழுவும்.சிறு புலியூர்” (முழுநீலம் - முற்றிலும் கறுத்துள்ள நீலோற்பல மலர்; அரவிந்தம் - தாமரை, கழுநீர் - செங்கழுநீர்ப் பூக்கள்; விரவி - சேர்ந்து, மடவார் - பெண்கள்) என்று காட்டுவார். இங்கு, சிறுபுலியூரில், ஊருக்கும் வயலுக்கும் வாசி (வேறுபாடு) தெரிந்துகொள்ளவொண்ணாதபடி இருக்கும் என்கிறார். நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களின் கண்களாகத் தோற்றும். அரக்காம்பல்களை நோக்கினால் அப்பெண்களின் செவ்விதழ்களை நிகர்ப்பனவாக இருக்கும்; தாமரை மலர்களைக் காணின், அம்மகளிர்களின் முகம்போலக் காட்சி அளிக்கும். எனவே, உள் விதிகட்கும் வெளிநிலங்களுக்கும் வேறுபாடு தெரிவதாக இருக்கும். இவ்வூர்ப் பெண்கள் கிளிப்பிள்ளைகட்குப் பேசும் பயிற்சி தருவதை “கிளி மடவார், செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்” என்று காட்டுவர். இங்ங்னம் ஊரின் சூழ்நிலையை அநுபவித்த வண்ணம் - ஊருக்குள் நுழைகின்றோம். ஊர் எப்படிப்பட்டது? திருவிற்பொலி மறையோர் வாழும் ஊராகும் சிறு புலியூர், ஓமத்தீயை வளர்க்கின்ற மறையோர் வாழும் ஊராகும்." அக்காலத்தில் வேதம் ஓதி வேள்வி வளர்க்கும் அந்தணாளர் வாழ்ந்த ஊராக இருந்தது என்பதை ஆழ்வார் இந்த இரண்டு பாசுரங்களில் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இப்பொழுது அத்தகையோர் வாழும் இடமாகத் திகழவில்லை. ஊர் சிறிய ஊராயினும் தேவையான ஒரு சில பொருள்கள் விற்கும் அங்காடிகள் உள்ளன. கோபுரவாயிலுக்கு வெளியில் வலப்புறத்தில் நல்லதொரு விடுதி உள்ளது. குடும்பத்துடன் வரும் திருத்தலப் பயணிகள் இங்கு வசதியாகத் தங்கலாம். தாங்களாக உணவு தயாரித்துக் கொள்ளலாம். வேறு நல்ல உணவு விடுதிகள் இங்கு இல்லை. 6. பெரி. திரு. 7-9:5 9. மேலது. 7.9.2 7. மேலது. 7-9:6 10. மேலது 7-9:7 8. பெரி. திரு 7-9:2 11. பெரி. திரு. 7-9:3