பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபுலியூர் அருமா கடலமுதன் 41 கீழ் கூறப்பெற்ற சிந்தனையுடன் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு புயங்க சயனத்தில் சேவை சாதிக்கும் அருமாகடலமுதனைக் கண்டு தரிசிக்கின்றோம். தாயாரின் திருநாமம் திருமாமகள் நாச்சியார். உற்சவ முர்த்தி கிருபாசமுத்திரப் பெருமாள் (கருணைக் கடல் பெருமாள்) என்ற திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார் திருமங்கையாழ்வாரின் திருப்பாசுரங்களாலேயே எம்பெருமானை வாழ்த்துகின்றோம்; சரண் புகுகின்றோம். சிறுபுலியூர் எம்பெருமான் இருக்கும் இடம் தனக்குத் தெரியவில்லையே என்கிறார் ஆழ்வார். சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை உறையும் மாயா! எனக் குரையாய்இது மறைநான்கின் உளாயோ? தீயோம்புகை மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத் தாயோ?உன தடியார்மனத் தாயோ?அறி. யேனே" (சேயோங்கு - மிகவும் உயர்ந்த தண் - குளிர்ந்த உறையும் - வசிக்கும்; மறை - வேதம்; தீ - ஒமத்தி, ஒம்பு - வளர்க்கும், மறையோர் - வேதியர்) என்பது ஆழ்வார் பாசுரம். “எம்பெருமானே, அடியேனுக்கு ஓர் ஐயம். நீ நான்மறையில் உள்ளாயா? சிறுபுலியூர் சலசயனத்தில் உள்ளாயா? நினது அடியார்களின் நெஞ்சில் உள்ளாயா? நீ இன்னவிடத்தில் உள்ளாய் என்பதை அடியேனால் அறியக் கூடவில்லை. நீயே நின் சோதி வாய்திறந்து அருளிச் செய்தருள்வாயாக’ என்றார். இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் “இத்தால் சொல்லிற்றாய்த்து செளபரி பலவடிவு கொண்டாப் போலே இவ்வோவிடங்கள்தோறும் இனி அவ்வருக்கில்லை என்னும்படி குறையற வர்த்திக்கிறபடியைக் (இருக்கிறபடியைக்) காட்டிக் கொடுத்தான்” என்பது, அப்ராக்ருத திவ்விய மங்கள விக்கிரகங்களையும் கண்ணால் கண்டு அநுபவிக்கலாம்படியான அர்ச்சா மூர்த்திகளையும் நெஞ்சாலே அநுபவிக்கலாம்படி அந்தர்யாமியாயிருக்கும் வடிவுகளையும் ஒருகாலே சேவை சாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சரியப்படுகின்றார் ஆழ்வார் என்பதை இதனால் பெற வைக்கின்றார். திருமாலிருஞ்சோலை உறையும் மாயா? என்று அழகரை விளித்தது என்னோவெனின் நான்மறைகள், சிறுபுலியூர் சலசயனம், அடியார் மனம் என்னும் இடங்களில் உறையும் எம்பெருமான் ஒருவனே என்ற உண்மையை விளக்குதல் இப்பாசுரத்தின் உள்ளுறையாதலால், திருமாலிருஞ் சோலை மலையில் உறைபவனும் இவனே என்பது விளியினால் பெறப்படும். 15. பெரி. திரு. 7-97