பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபுலியூர் அருமா கடலமுதன் 43 என்ற திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்கு வர அதனையும் ஓதி மகிழ்கின்றோம். இதற்கு அடிமூலமாக உள்ள திருமழிசையாழ்வாரின் பாசுரத்தையும் சிந்திக்கின்றோம். "அவர்இவர் என்றுஇல்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிர்இல்லை கண்டீர் - உவரிக் கடல்நஞ்சம் உண்டான் கடன்என்று வாணற்கு உடல்நின்று தோற்றான் ஒருங்கு" (அனங்கவேள் - மன்மதன், உவரிக் கடல் - உப்புக் கடல்; நஞ்சம் - நஞ்சு, கடன் என்று - உன்னைக் காக்க நான் கடமைப்பட்டவன் என்று ஒருங்கு - குடும்பத்துடன், பரிவாரத்துடன்) என்பது பாசுரம். அவர் என்பது சிறந்தவர்களையும், இவர் என்பது தாழ்ந்தவர்களையும் குறிக்கின்றன. “தாழ்ந்தவர்களான நம் போலியர் எம்பெருமானுக்கு எப்படி எதிராக முடியாதோ, அப்படியே உயர்ந்தவர்கள் என்று கருதப்பெறும் உருத்திராதிகளும் எம்பெருமானுக்கு எதிர் நிற்க முடியாது” என்ற கருத்து இப்பாசுரத்தில் வலியுறுத்தப்பெறுகின்றது. “கலியன் ஒலிமாலை, பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே” என்ற பல சுருதிப் பாடலடிகளை நினைந்தவண்ணம் நாம் திருக்கண்ணபுரத்தை நோக்கிப் பயணமாகின்றோம். 19 நான். திருவந். 56 20. பெரி. திரு. 7-9:10