பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். குலசேகராழ்வார் கண்ணபுரத்து எம்பெருமானுக்குக் கண்ணபுரத்துக் கருமணி என்று திருநாமம் சூட்டுகின்றார். இந்த எம்பெருமான் ஆழ்வாருக்கு இராமனாகவே காட்சி அளிக்கின்றார். அதுவும் குழந்தை இராமனாக ஆகவே, தாலாட்டுப் பாடல் பாடின முகத்தால் திருமொழியை அருளிச் செய்கின்றார் ஆழ்வார். வண்டியில் வரும்போதே தாலாட்டுத் திருமொழியில் ஆழங்கால்படுகின்றோம். “கோசலையின் திருவயிற்றில் கோமகனாக அவதரித்தவன் இராமன், இலங்கைக் கோமான் இராவணனின் பத்துத் தலைகளையும் சிதற அடித்தவன்; எனக்கு நீல இரத்தினம் போன்றவன் எனக்கு அமுதம் போன்றவன்; இவனே இராகவ நம்பி (1). நின்னுடைய நாபியில் அலர்ந்த தாமரையின் மேல் நான்முகனைத் தோற்றுவித்து உலகங்களை யெல்லாம் படைத்தவன்; எட்டுத் திக்கிலுள்ளவர்களையும் அடிமை கொண்டருள்பவன் (2). சனகனின் மருமகன்; சக்கரவர்த்தி திருமகன்; எங்கள் குலத்து இன்னமுதன் (3). தாமரைமேல் அயனைப் படைத்தவன், தயரதனின் திருமகன்; மைதிலியின் மணவாளன்; அம்புகள் தொடுக்கப்பெற்ற வில்லை ஆள வல்லவன் (4). பாராளும் படர்செல்வத்தைப் பரத நம்பிக்கு அளித்து ஆரா அன்பு இளையவனுடன் அருங்கானமடைந்தவன்; வெற்றித் திருமகளுக்கிருப்பிடமாய் மலை போன்ற திருமார்பையுடையவன் (5). சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கானம் அடைந்தவன்; உனக்கே அற்றுத் தீர்ந்த பரபக்தர்கட்கு அருமருந்து போன்றவன்; அயோத்தி நகருக்கு அதிபதி, சிற்றன்னையின் சொற்கேட்ட சீராமன் (6). பாலனாய் ஏழுல குண்டவன், வாலியை வானுலகுக்கு அனுப்பி வானர அரசைப் பகலவன் மைந்தனுக்கு அளித்தவன்; ஆலிநகரின் அதிபதி, அயோத்தி நகருக்கு அரசன் (7). மலைகளைக்கொண்டு சேது.கட்டி மதிலிலங்கையை அழித்தவன்; அலை கடலைக் கடந்து அமரர்கட்கு அமுதளித்தவன்; சிலை வலவன், வீரன், சீராமன் (8). தயரதனின் குல விளக்கு இலங்கையைப் பொடிப் படுத்தின எம்மான், இளையவர்கள்மீது இன்னருள் சுரப்பவன் (9). தேவர்கள், அசுரர்கள் திசைகள் இவற்றைப் படைத்தவன்; அன்பர்கள் அடி வணங்க அரங்கநகரில் அறிதுயில் கொண்டிருப்பவன் (10)” இங்ங்னம் கண்ணபுரத்தெம்மானை இராமனாகப் பாவித்து, இராமனின் வீரச் செயல்களையும் வெற்றிச் செயல்களையும் அநுபவித்து அகமகிழ்கின்றார் ஆழ்வார். “இராகவனே தாலேலோ” என்று தாலாட்டுகின்றார். அர்ச்சாவதார எம்பெருமானை விபவ 5. பெரு. திரு. 8 6. இராமன் அரச குலத்திற் பிறந்தாற் போன்று இவரும் அரச குலத்தவராதலால் ‘எங்கள் குலத்தவன் என்று அருளிச் செய்துள்ளார்.