பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 47 எம்பெருமானாகப் போற்றுகின்றார். இதனால் இரண்டும் ஒன்றுதான் என்ற வைணவ சமயதத்துவத்தையும் விளக்கி விடுகின்றார். பெரியாழ்வாருக்குக் கண்ணபுரத்துக் கருமணி கண்ணபுரத்து அமுதமாக இனிக்கின்றான். இவர்தம் அருமைத் திருமகளார் ஆண்டாள் காட்டு வாழ்க்கையையும் நகர வாழ்க்கையையும் வாசியற இனிதாகக் கொள்ளும் மன மாண்பு விபவாவதாரத்தில் இராமனிடம் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை எடுத்துக் காட்டுகின்றாள். தண்ட காரண்ய வாழ்க்கைக்கும் விருந்தாவன வாழ்க்கைக்கும் ஒப்பாகும் திருமலை வாழ்க்கை. அயோத்தி வாழ்க்கைக்கும் ஆயர்பாடி வாழ்க்கைக்கும் ஒப்பாகும் கண்ணபுரநகர் வாழ்க்கை. இதனை, காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்' என்று பாசுரம் இட்டுக் காட்டுவர் நம் அன்னையார். “குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு” என்னும்படி நித்திய சூரிகளின் அவையின் நடுவே மிக்க பேரொளியுடன் எழுந்தருளியிருக்கும் இருப்பு தவிர்ந்து மநுஷ்ய நாற்றம் நாறுகின்ற இந்த சமுசார நிலத்திலே நடையாடி, "கானமும் வானரமும் வேடு மானவற்றிற்கு முகங் கொடுத்துக் கொண்டு நிற்க வேண்டிற்றே என்று திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல் இருட்டறையில் விளக்குப்போலே நம்முடைய அநந்த கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப்பெற்றோமே! என்று அளவற்ற மகிழச்சியோடே எழுந்தருளியிருப்பதை எண்ணி எண்ணி மகிழ்கின்றார். இராமகிருஷ்ணாவதாரங்கள் ஒரு காலத்தளவில் உள்ளார்க்கு மட்டிலும் என்று பின்னானார் வணங்கும் சோதியாகாமல் தீர்த்தம் பிரசாதித்துவிட்டுத் தன் சோதிக்கு எழுந்தருளினாப் போலன்றி நித்திய வாசம் செய்தருளுகின்ற இடங்களாகும் அர்ச்சாவதத் திருப்பதிகள். இதனை நினைந்தே 'மகிழ்ந்துறை என்று குறிப்பிடுகின்றார் அன்னையார். எம்பெருமானை அடிபணிந்து பேறு பெற வேண்டியதாகையாலே அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்ல வேண்டியவர்கள் சேதநர்கள். அங்ங்ணமிருக்க இவர்களிடத்தை நோக்கி அவ்வெம்பெருமான் புறப்பட்டு வருவதற்குக் காரணம் என்ன? என்ற ஐயம் பிறக்கக் கூடுமாதலால் அந்த ஐயத்திற்கு தெளிவு தருவது போல் 'வாமனன் என்கின்றாள். 7. பெரியாழ். திரு. 1.5:8 8. நாச். திரு. 4.2