பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 49 ஆழ்வாரின் இக்குறிப்புகளினால் இத்திருத்தலம் நீர்வளம், நிலவளம் மிக்கது என்பது தெளிவாகின்றது. திருமங்கையாழ்வாரும் “கார் வானம் நின்றதிருக் கண்ணபுரம்' “கார்மலி கண்ணபுரம்' “கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ணபுரம்' என்பவற்றால் அடிக்கடி கறுத்த மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கும் குறை இல்லை என்பதனையும் அறிகின்றோம். மேலும் இந்த ஆழ்வார், “காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரம்" (கா - சோலை; கடி . மணம்). என்று சோலையின் எழிலை எடுத்துக்காட்டுவர். இந்த ஆழ்வார் ‘கண்ணபுரத்து ஆதி" யை நூறு பாசுரங்களாலும் (பத்துத் திருமொழிகள்) திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்திருப்பதால் ஊரைப் பற்றிப் பேசவும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் பெருமைகளைப் பேசவும் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றார். பெரும்பாலும் குற்றெழுத்துகளே நிரம்பப் பெற்றுச் சித்திர கவிகளாலும் ஒரு திருமொழியைப் பாடி மகிழ்கின்றார். ஊரின் சூழ்நிலையை இவ்வாறு காட்டுவர். திருக்கண்ணபுரம் குளங்கள் நிறைந்த ஊர் (பெரிய திரு. 8-7-1). களை பறிக்கின்றவர்கள் களைக் கட்டுகளைக் கொண்டு களை பறிக்குங்கால் சிறு தூறுகளினின்றும் புறப்படும் முயல்கள் அவர்கள் முகத்தில் துள்ளும்; செழிப்பான கழனிகளில் கயல் மீன்கள் துள்ளும் (3); வண்டுகள் சோலைகளெங்கும் நறுமணமுள்ள மலர்களைக் கோதி, மதுவைப் பருகி அக்களிப்பினால் இசை எழுப்பும் (4,6), கழனிகளில் கலப்பைகளைச் செலுத்தும்போதும், காலால் குழப்பும்போதும் இடையிலே தப்பிக்கிடந்த தாமரை மலர்களினின்றும் நறுமணம் புறப்படும் (8). மேலும், கண்ணபுரம் காடும் வயல்களும் சூழ்ந்திருக்கும் (பெரி. திரு. 8-8-1), வயல்களில் செழித்த செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்து இருள் முடிக் கிடக்கும் (4), வயல்களில் பொன்போன்ற நெல் விளைச்சலைக் காணலாம்; பல இடங்களில் முல்லை மலர்கள், கருமுகை மலர்கள், செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து கிடக்கும் (5): நீலோற்பல மலர்கள் எங்கும் மணம் பரப்பி நிற்கும்; அவற்றில் வண்டுகள் கூட்டங்களாக மதுவினைப் பருகும் (6), கடலை அடுத்திருப்பதால் பரிமளம் மிக்க தாழைகள் ஊருக்கு வேலிபோல் 15. மேலது 8.1:4 18. மேலது 8.1:7 16. மேலது 8.2:10 19. பெரி. திரு. 8.7 17. மேலது 8.6:10