பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S() சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி அமைந்திருக்கும் (7), ஒரு புறத்தில் கடலலைகள் முத்துகளை ஒதுக்கித் தள்ளும்; இன்னொரு புறத்தில் அழகிய செந்நெற் பயிர்கள் சாமரம்போல் வளைந்து வீசும் (9), கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட சூழ்நிலையை இன்றும் காணலாம். எங்கும் சோலைகள், வண்டினங்களின் இன்னோசைகள். இந்தச் சூழ்நிலையில் ஆழ்வாருக்கு வண்டுகளை நோக்கிப் பாடத் தோன்றியது போலும். நாயகி நிலையிலிருந்து பத்துப் பாசுரங்களைப் பாடி இனியராகின்றார். அவற்றுள் ஒன்று விண்ட மலரெல்லாம் ஊதி, நீ என்பெறுதி? அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ணபுரத்த எம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்துஊதாயதா கோல்தும்பி" (விண்ட - மலர்ந்த ஊதி - ஒலிசெய்து; அண்டம் - உலகங்கள்; அமரர்கள் - தேவர்கள்; நறு - மணம் மிக்க) 'தும்பி என்பது வண்டுகளில் ஒருவகை, கரு வண்டு என்றும் கூறுவர். மரக்கொம்புகளில் மதுவுக்காகத் திரியும் இயல்புபற்றிக் 'கோல் தும்பி’ (கோல் - கிளை) என்று விளித்துப் பேசுகின்றாள். “திறந்த கிடந்த வாசல் எல்லாம் திரியுமாப் போலே விண்டமலர்கள் தோறும் நீ ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப் போகின்றாய்? அற்பமாயும் நிலையற்றதுமாயும் உள்ள மதுவையுடைய இம்மலர்களிலே ஊதித் திரிவதை விட்டு, திருக்கண்ணபுரத்தில் சந்நிதி பண்ணிக் கொண்டிருக்கும் எம்பெருமானுடைய திருத்துழாய்மாலையிலே உன் சுற்றத்தாருடன் தங்கியிருந்து அங்குள்ள பரிமளத்தை இங்குக் கொணர்ந்து ஊதுவாகில் மிகுதியும் நிலையானதுமான மதுவைப் பருகலாம்” என்கின்றாள் பரகால நாயகி. வண்ணம் திரிவும் மனம்குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும் உண்ண லுறாமையும் உள்மெலிவும் ஒதநீர் வண்ணன் என்பானொருவன் தண்ணந் துழாய்என்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும்' (வண்ணம் . மேனி நிறம்; திரிவு - மாறுபாடு; குழைவு தளர்ச்சி; உண்ணல் உறாமை - உணவு வேண்டியிராமை; உள்மெலிவு - அறிவு சுருக்கம்) 20. பெரி. திரு. 8.4:3 21. நாச். திரு. 12:7