பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ? சொல்லீர் (8.2-1); நீள் நிலா முற்றத்து நின்று பார்த்து 'காணுமோ கண்ணபுரம்? என்று காட்டினாள் (2); 'திருமலை’ என்றும், திருநீர்மலை' என்றும் வாய்வெருவினாள்; திருமெய்யத்தைப் பற்றி வினவி (மறுமொழி கூறுவார் ஒருவருமின்மையினால்) வாளாவிருக்கின்றாள்; 'திருக்கண்ணபுரம்' என்று வாயாற் சொன்னவளவில் நீர்ப்பண்டமாய் உருகிவிட்டாள் (3); உண்ணுவதில்லை; உறங்குவதுமில்லை முதிர்ந்த பருவமுடையவளும் அல்லள்; இளம் பெண்தான்; இவள் கண்ணபுரத்தைத் தொழுவது என்ன ஆச்சரியம்? (4): திருக்கண்ணபுரத்தை நோக்கித் தொழும் இவள் தோழிக்கும் மறைக்கக் கூடிய தன் நெஞ்சோட்டங்களைச் சிறிதும் ஒளிக்காமல் என்னிடம் வாய்விட்டுச் சொல்லுகின்றாள். பெண்மைக் குணத்திற்கு இது தகுதியோ? (5). நம்மாழ்வார் பிராட்டியின் நிலையிலிருந்து கொண்டு கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் (திருவாய் 5.6) என்று தொடங்கித் தன்னை எம்பெருமானாகவே பேசித் தரித்ததுபோலவே இவளும் அர்ச்சாவதார ஈடுபாடு அதிகமுடையவளாகையாலே வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம்' என்று தன்னைச் செளரிராஜப்பெருமாளாகவே சொல்லிக் கொள்ளுகின்றான் (6): கடல் முழங்கினாலும் தண்மதி காய்ந்தாலும் இவள் வருந்துகின்றாள்; 'தரங்கம் வாய்க் கீண்டு உகந்தானது தொன்மை ஊராகிய திருவரங்கம் என்று கூறுவதே இவளுக்கு ஆசையாக உள்ளது (7); பக்தர்கள் உன் திருவடிகளைச் சேவித்து உய்ந்து போவதைக் கண்ணுற்றவள் திருக்கண்ணபுரம் சேவிக்கச் சென்றாள்; அப்படிப்பட்ட இவளை இப்படி மேனி நிறம் அழியச் செய்வது நீதியோ? (8): முளைக்கின்ற பற்களும் வாய் நிரம்பிற்றில; எடுத்து முடிக்கப் போதுமான அளவு கூந்தலும் வளரவில்லை; விவேகமுடையவள் என்ற பேச்சுக்கும் இடமில்லை” (9). திருநெடுந்தாண்டகத்தில் (16) திருத்தாயார் பேசும் பாசுரம் மிகவும் அற்புதமானது. கன்றுமேய்த்து இனிதுஉகந்த காளாய்! என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்துஎன் கனியே! என்றும், மன்றுஅமரக் கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும், வடதிருவேங் கடம்மேய மைந்தா! என்றும்,