பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 55 வென்று அசுரர் குலம்களைந்த வேந்தே! என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும், துன்றுகுழல் கருநிறத்துஎன் துணையே! என்றும் துணைமுலைமேல் துளிசோர சோர்கின்றாளே. (உகந்த - மகிழச்சி கொண்ட காளாய் . காளையே கடி . கணம்; மன்று இடையர் கூடும் இடம்; மேய - வாழ்கின்ற களைந்த - அழித்த பொழில் - சோலை; துன்று - அடர்ந்த சோர்தல் . தளர்தல்) தன் மகள் கண்ணிரும் கம்பலையுமாக இருக்கும் நிலையைப் பேசுகின்றாள் திருத்தாயார். கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்” என்றவுடனே கடிபொழில் சூழ் கண புரத்து என் கனியே என்று சொன்ன அமைதியை நோக்கி, இவ்விடத்திற்குப் பட்டர் ரஸோக்தியாக (சுவையாக) அருளிச் செய்வதொன்றுண்டு. “கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவை கை தவறிப் போகையாலே அவற்றை மடக்கிப் பிடிக்கப் போனவிடத்திலே விடாய்தீர விருப்பதொரு சோலையைக்கண்டு திருவாய்ப்பாடியாக நினைத்துப் புகுந்தான்; அப்பொழில் மயல் மிகு பொழிலாகையாலே கால்வாங்க மாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக்கண்ணபுரம்” என்பாராம். மன்று அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய்' என்பதில் அமரக் கூத்தாடுகையாவது, கூத்தாடி முடிந்த பின்பும் அவ்விடம் கூத்தாடுவது போலவே காணப்படுகையாம். “பெருந்துகள் எழுந்தருளிப் புக்க திருவீதி போலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது” என்று பட்டர் பணிப்பர். மகிழ்ந்தாய் என்பதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானம்: கூத்துக் கண்டவர்கள் உகக்கையன்றியே உகப்பானும் தானாயிருக்கிறபடி, அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய், உகப்பானும் தானாய் இருக்கிற, வடதிரு வேங்கடம் மேய மைந்தா என்பதில் ஓர் ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்தபடியைச் சொல்லுகிறது. விரிபொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்பதில் நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாட்சிக்க அக்கடாட் சமே விளைநீராக வளர்கின்ற பொழிலாகையாலே விரிபொழிலாயிருக்கும். அசேதநங்களைக் கடாட்சித்து வளரச் செய்பவன் என்னக் கடாட்சியா தொழிவதேன்? என்கின்றாள். பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னுரை அவள் பெயரால் புகழ்பெறச் செய்து நாச்சியார் கோயிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கைவழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை நஞ்சாக நினைப்பதேன்? என்பது உள்ளுறை. இப்படியெல்லாம் சொல்லா நின்றும், தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி