பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 57 செய்கின்றார். “கணபுரம் அடிகள்தம் இடமே” என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாக எம்பெருமானின் இருப்பிடத்தையும் அநுபவித்து இனியராகின்றார் (8-7). எம்பெருமானை மீன், ஆமை, வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், தசரத ராமன், பலராமன், கிருஷ்ணன் என்ற அவதார மூர்த்திகளாகக்கொண்டு அநுபவித்து அகமகிழ்கின்றார் (8.8). இக்கண்ணபுரத்தம் மானுக்கன்றி வேறொருவனுக்கு உரியேன் அல்லேன் என்று தன் அநந்யார்ஹ சேஷத்துவத்தை 'அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே என்றும், கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரித்தேயேனோ? (8.9-3) என்றும் வெளியிட்டு மகிழ்கின்றார். அடுத்த திருமொழியிலும் “நின்னையல்லால், வருதேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் நான் கருதேனே' (8-102) என்று தான் "மறந்தும் புறந் தொழா மாந்தன்” என்பதை அரண் செய்கின்றார். இதற்கு முத்தாய்ப்பாக, “மற்றும்ஒர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும்உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின்திரு எட்டெழுத்தும் கற்றநான்” (மற்றும் - உன்னைக் காட்டிலும், உற்றிலேன் - இனங்கேன்) என்று பேசுவர். “பிற தெய்வங்களைத் தொழுவாரோடு இணங்க மாட்டேன். உன் எட்டெழுத்து மந்திரம் அர்த்த பஞ்சகத்தைப் பேசினாலும், நான் கண்ட சிறப்புப் பொருள் பாகவத சேஷத்துவமேயாகும்” என்று தம் ஊற்றத்தை வெளியிடுகின்றார். இந்த எண்ணங்கள் நிறைந்த மனத்துடன் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்கொண்டு சேவை சாதிக்கும் செளரிராஜப் பெருமாளை வணங்குகின்றோம். அபயம் அளிக்கும் திருக்கைக்குப் பதிலாக வரம் அளிக்கும் திருக்கையுடன் காட்சி தருகின்றார் இப்பெருமான். அரங்கநாதனிடம் காணப்பெறுவதைப் போலவே இவர் கையிலும் பிரயோக சக்கரம் காணப்பெறுகின்றது. சில பாசுரங்களை இவர் திருமுன் மிடற்றொலி கொண்டு சேவிக்கின்றோம். தாயாரின் திருநாமம் கண்ணபுர நாயகி. இவரையும் சேவித்து இவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். எம்பெருமானைச் சேவிக்கின்றபோது அவர் தலையில் செளரி (மயிர்) இருப்பதைக் காட்டுகின்றார் அர்ச்சகர். இது காரணமாகத்தான் 26. பெரி. திரு. 8.10.3