பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 59 உன் திருவடிகளை உபாயமாகப் பற்றிக் கொண்டிருப்பேனேயன்றி, அவற்றை விட்டு நீங்கேன்” என்கின்றார் அய்யங்கார். இந்த எண்ணம் நமக்கும் வேண்டும் என்று விரும்புகின்றோம். கண்ணபுரத் தம்மான் மீது கலம்பகம் ஒன்று' (1966) தோன்றியுள்ளது. இதன் ஆசிரியர் திரு. டி. எஸ். இராசகோபாலன் என்பவர். இத்திருத்தலத்தின் மேன்மை, இங்கு பிராட்டிமார் நால்வருடன் எழுந்தருளியிருக்கும் பெருமானது பேரருள், இவனது திருவடிகளில் அடிமை செய்யும் பெரியோர்களது சீர்மை, இப்பெரியோர்களின் கழல்களைப் பற்றிப் பெருமானையும் பற்றுவது கடமை என்பன போன்ற கருத்துகள் இந்நூலில் காணப் பெறுகின்றன. சொல் நயமும், பொருள் நயமும், கருத்துச் செறிவும், பக்திச் சுவையும் நிறைந்துள்ள இந்நூலின் பாசுரங்கள் பாடிய வாய் தேனுறச் செய்யும் பான்மையனவாய்த் திகழ்கின்றன. உகந்து கடவன் பலவின் கனியை உகிரதனால் வகிர்ந்து மதுபாய்ச்ச மந்தி கிளையொடும் வாரிதனில் புகுந்து கதலிக் குலைதோய்த்துப் பெருமான்றன் பொன்னடி உகந்திடும் ஊராம் பொழிலார் கணபுர ஒண்ணகரே (9) (உகிர் - நகம்; வகிர்ந்து - பிளந்து வாரி . மதுவெள்ளம், கதலி - வாழை) இதில் ஆசிரியர், திருக்கண்ணபுரத்தில் வாழும் விலங்குகளும் பெருமான்பால் பக்தி கொள்வன என்பதைக் காட்டுகின்றார். ஆண் குரங்கு தன் மந்தியுடனும் குட்டிகளுடனும் வாழைப் பழங்களைக் குலை குலையாகத் தேன் வெள்ளத்தில் தோய்த்துப் பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கும் என்கின்றார். இறப்பு, நிகழ்வு, எதிர்காலமாய் நிற்கும் எம்பெருமான் செளரிப் பெருமாள் வாரத்தின் நாட்களாகத் திகழ்வதை சொற்சுவை பொருட்சுவையுடன் எடுத்துக்காட்டுவது கற்றோர்க்கும் பக்தர்கட்கும் பேரின்பம் பயப்பதாக உள்ளது. ஞாயி றுறைவார் முகந்திங்கள் நற்செவ் வாயோ ஒண்பவளம் வாயும் வளமோ அம்புதனின் வணமே, வலியார் மாகணமே மாய முனிந்த வியாழமதே, வெள்ளி யாகும் வாய்நகையே காயும் நரகுக் கோர்.அசனி கண்ண புரத்தார் கண்டிரே. (60) 28. நூலின் பெயர். திருக்கண்ணபுரக் கலம்பகம் என்பது.