பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அணிந்துரை சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன் சோழநாட்டுத் திருப்பதிகள் (இரண்டாம் பகுதி) பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சியின் விளைவிலே வெளிவருகிறது. உழைப்பால் உயர்ந்து, உள்ளத்தால் சிறந்து, செந்தமிழைச் சுந்தரத் தெலுங்கு நிலவும் நாட்டிலேயும் பரப்பிப் பெருமை கண்டவர் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள். அறிவியலைத் தவிர, தமிழிலேயும், குறிப்பாக வைணவ சமயத்திலேயும், அறிவாற்றலும், ஆழ்ந்து ஈடுபாடும் கொண்டவர் ரெட்டியார் அவர்கள். சமய நூல்கள் செந்தமிழைப் பெரிதும் வளர்த்துள்ளமை நம் தமிழகத்தின் பாரம்பரியப் பண்பாடாகும். சைவ நெறியும், பெளத்த நெறியும், சமண நெறியும், வைணவ நெறியும் இன்பத்தமிழ் பாடி எண்குணத்தான் பெருமையினைத் தமிழிலே போற்றி மகிழ்ந்துள்ளது. 'தெளியாத மறை நிலங்கள் தெளிய ஒதிய பெருமை வைணவப் பாசுரங்களுக்கு மிக உண்டு. வேதம் அனைத்திற்கும் வித்தாகும் சோதை தமிழை வில்லிபுத்துராரின் கோதையின் திருப்பாவையில் கண்டு மகிழ்கின்றோம். திருப்பதிக்கும், தென்மண்டலத்திலே இராமநாதபுர மாவட்டத்திற்கு மட்டும் வைணவம் சொந்தமல்ல. சோழநாட்டுத் திருப்பதிகளைக் கண்ணுறுங்கால் வைணவம் செழித்து வளர்வது நன்கு புலப்படும் என்பதனைப் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் சோழ நாட்டுத் திருப்பதிகளை நம் கண்முன் தம் எழுத்தோவியத்தின் மூலம் சித்திரித்துக் காட்டுகின்றார். இந்நூலில் அருமையான வைணவ தத்துவங்களை எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ள பான்மை ரெட்டியார் அவர்களுடைய ஆழமான அறிவினை எடுத்துக்காட்டுகின்றது. திராவிட சிசு என்று ஆதிசங்ககரரால்