பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 61 (பெரியாழ். திரு. 3-4) கண்ணன் திருவாயில் இடம்பெற்ற வேய்ங்குழல் அவன் வாயில் பெருகும் மதுவை அருந்தி, நெற்றியில் எழும் சுடரையும், விரல்களிலணிந்துள்ள மோதிரத்தின் மணிகளிலெழும் சுடரையும், கண்மணியின் ஒளியையும் கண்டுபெறும் திளைப்பு பரமபத நாதனை அநுபவித்துத் திளைக்கும் நித்திய சூரிகளின் திளைப்புபோல் முடிவற்றதாகும் என்பதை நோக்கச் செய்கின்றார். திருமங்கையாழ்வார் இந்த செளரிப் பெருமாளிடம்தான் எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. இத்திருமந்திரப் பொருளை ஓர் அரிய பாடலால் (96) அருமையாக விளக்குவர் ஆசிரியர். "பலவகை மலரும் தழையும் கொண்டு வனமாலையாகத் தொடுப்பதுபோல், உன் பல்வகைச் சீர்களைக்கொண்டு யாப்புச் சீர் மலிந்து பாமாலையாகத் தொடுத்து உன் திருவடிகளில் சமர்ப்பித்தேன்” என்று கூறும் இறுதிப் பாசுர அடிகள் இவை : அரும்பியெழு பத்துரையார் உள்ளத்தும் ஆர்ந்தனை நீ அடியேன் பாலும் விரும்பிமிக வந்தனையால் கலம்பகமா வேய்ந்தளித்தேன் உன்றன் சீரே. (100) இப்பாடலுக்கு முன்னுள்ள ஒங்குதிரைப் பவக்கடலும் வற்றி மேலா ஒண்சுடரின் ஊடுகடந் தப்பால் விண்ணுள் ஓங்குசுடர்ப் பெம்மான்றன் அடியோ ரோடும் ஒழிவின்றிப் பணிசெய்நாள் என்றோ? மண்ணில் ஒங்குபுனல் சூழ்கண்ண புரமே தோயும் உத்தமன்றன் மலரடியை அடியா ரோடும் ஒங்குபெருங் காதலொடும் பரவி ஏத்தல் உறும்என்னில் விண்தனினும் மேல தன்றோ? (95) என்ற பாடல் நம்மாழ்வாரின் "ஒழிவில் காலமெல்லாம்” (திருவாய் 33-1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையும் திருமங்கையாழ்வாரின் 'ஒண்மிதியில் (திருநெடுந். 5) என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரத்தையும், “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சவை பெறினும் வேண்டேன்” (திருமாலை - 2) என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பாசுரப் பகுதியையும் நினைக்கச் செய்வதுடன் ஆசிரியரின் கைங்கரியத் துடிப்பையும் நாடி பிடித்துக் காட்டுகின்றது. இங்ங்னம் திருக்கண்ணபுரக் கலம்பகப் பாடல்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.